நபா கிசோர் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபா கிசோர் தாசு
அலுவல்சார் புகைப்படம் 2020
சட்டமன்ற உறுப்பினர் ஒடிசா சட்டமன்றம்
பதவியில்
19 மே 2009 – 29 சனவரி 2023
முன்னையவர்கிசோசர் குமார் மொகந்தி
பின்னவர்காலியிடம்
தொகுதிஜார்சுகுடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நபா கிசோர் தாசு

(1962-01-07)7 சனவரி 1962
இறப்பு29 சனவரி 2023(2023-01-29) (அகவை 61)
புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம் (சனவரி 2023 வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு

நபா கிசோர் தாசு (Naba Kishore Das)(சனவரி 7, 1962-29 சனவரி 2023) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா மாநில அமைச்சராக பணியாற்றியவரும் ஆவார்.

இளமையும் அரசியலும்[தொகு]

சட்டப் பட்டதாரியான நபா தாசு, கல்லூரி நாட்களிலிருந்தே அரசியலில் ஈடுபட்டு, சம்பல்பூரில் உள்ள கங்காதர் மெஹர் கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதன் முதலாக 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒடிசா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ஜார்சுகுடா சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] பின்னர் 2014-ல் நடைபெற்ற தேர்தலிலும் ஜார்சுகுடாவிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தாசு பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார்.[2][3] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், நவீன் பட்நாயக் அமைச்சரவையில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[4][5][6][4]

இறப்பு[தொகு]

காவலர் ஒருவரால் சுடப்பட்ட தாசு, சிகிச்சைப் பலனின்றி சனவரி 29, 2023 அன்று உயிரிழந்தார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Orissa Election Result 2009 With Vote Margin". leadtech.in. Archived from the original on 27 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014. 22516
  2. "Reports on Election 2014 - See page no. 124, archived on" (PDF). 6 June 2017. Archived from the original (PDF) on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 19 February 2019.
  3. "CEO ODISHA". archive.is. 19 February 2019. Archived from the original on 19 February 2019. பார்க்கப்பட்ட நாள் 19 February 2019.
  4. 4.0 4.1 Zee News (24 May 2019). "Odisha Assembly election results 2019: Full list of winners" (in en) இம் மூலத்தில் இருந்து 8 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221108183944/https://zeenews.india.com/assembly-elections/odisha-assembly-election-results-2019-full-list-of-winners-2205899.html. பார்த்த நாள்: 8 November 2022. 
  5. https://www.ndtv.com/people/odisha-health-minister-naba-kishore-das-who-was-shot-played-crucial-role-during-covid-5-facts-3734326
  6. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-12-17. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. https://www.livemint.com/news/india/odisha-health-minister-naba-kishore-das-who-was-shot-by-a-cop-dies-of-bullet-injury-11675002338499.html
  8. "Odisha: ఏఎస్సై కాల్పుల ఘటన.. తూటా గాయాలతో ఒడిశా ఆరోగ్య మంత్రి కన్నుమూత". 29 January 2023. Archived from the original on 29 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபா_கிசோர்_தாசு&oldid=3801744" இலிருந்து மீள்விக்கப்பட்டது