துஷ்யந்த் சிறீதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துஷ்யத் ஸ்ரீதர்
பிறப்புதுஷ்யந்த் ஸ்ரீதர்
1986
தேசியம்இந்தியர்
வலைத்தளம்
https://www.desikadaya.org/

துஷ்யந்த் ஸ்ரீதர் (Dushyanth Sridhar) (பிறப்பு: 1986) தமிழ், கன்னடம், ஆங்கிலம் மற்றும் சமசுகிருதம் மொழி எழுத்தாளரும், ஆன்மிகப் பேச்சாளரும் ஆவார்.[1] இவர் பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, பாகவதம், இராமாயணம், மகாபாரதம், திருப்பாவை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவாய்மொழி போன்ற தலைப்புகளில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.[2]

வரலாறு[தொகு]

தமிழ் வடகலை ஐயங்கார் குடும்பத்தில், பெங்களூரில் பிறந்த துஷ்யந்த் சிறீதர் இளமையில் சமசுகிருதம் மற்றும் வேதங்களை கற்றார். பள்ளிப் படிப்பை பெங்களூர் மற்றும் சென்னையில் முடித்த துஷ்யந்த், பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் 2008ம் ஆண்டில் பட்டம் பெற்றார். தொழிற்சாலைகளில் சில ஆண்டுகள் பணிபுரிந்த துஷ்யந்த் சிறீதர்[3] 2016ம் ஆண்டு முதல் மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் முழு நேர வைணவ ஆன்மீக சொற்பொழிவாளராக மாறினார்.[4]

துஷ்யந்த் சிறீதர் வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், நாட்டியம் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றார்.[5][6][7] இவர் வேதாந்த தேசிகர் எனும் திரைப்படத்திற்கு கதை எழுதி நடித்துள்ளார்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramakrishnan, Deepa H. (2015-02-06). "Upanyasam no longer the forte of the old and wise" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/no-longer-the-forte-of-the-old-and-wise/article6863002.ece. 
  2. Ramanujam, Srinivasa (2015-01-01). "Young man on an epic journey" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/society/dushyanth-sridhar-on-an-epic-journey/article6745445.ece. 
  3. "New age exponent". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/new-age-exponent/article5867710.ece. பார்த்த நாள்: 5 September 2018. 
  4. Samanth, Subramanian (23 May 2015). "In the beginning was the word". Live Mint. https://www.livemint.com/Sundayapp/zsEBJDUoFd9l7xM7x12kcM/In-the-beginning-was-the-word.html. பார்த்த நாள்: 5 September 2018. 
  5. Kulkarni, Impana (2015-05-21). "A tale of faith and devotion" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/dance/darshanam-arts-productions-show-at-narada-gana-sabha/article7231289.ece. 
  6. Krishnan, Madhuvanti S. (2016-01-07). "Coming home to their art" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/Coming-home-to-their-art/article13986407.ece. 
  7. Swaminathan, Chitra (2016-01-14). "And the story goes on…" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/And-the-story-goes-on%E2%80%A6/article14012131.ece. 
  8. "Upanyasam exponent to play Vedanta Desika - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
  9. Ramanujam, Srinivasa (2016-04-08). "Now, a film on Vedanta Desika" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/now-a-film-on-vedanta-desika/article8451391.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துஷ்யந்த்_சிறீதர்&oldid=3890970" இலிருந்து மீள்விக்கப்பட்டது