திலகநாயகம் போல்
| லயனல் திலகநாயகம் போல் | |
|---|---|
இசைக்கச்சேரி ஒன்றில் திலகநாயகம் போல் பாடுகிறார் |
|
| பிறப்பு | யாழ்ப்பாணம் |
| இறப்பு | டிசம்பர் 5, 2009 (அகவை 68) யாழ்ப்பாணம் |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| கல்வி | சங்கீத பூஷணம்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) |
| பணி | உதவிக் கல்விப் பணிப்பாளர் |
| பணியகம் | அரசுப் பணி |
| அறியப்படுவது | கருநாடக இசை, மெல்லிசைப் பாடகர், |
| பெற்றோர் | போல் தங்கமலர் |
| வாழ்க்கைத் துணை | லூர்து இருதயறோசா, பத்தினியம்மா |
லயனல் திலகநாயகம் போல் (இறப்பு: டிசம்பர் 5, 2009[1], அகவை 68) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற முதல் யாழ்ப்பாணத்தவர் என்று அறியப்படுபவர்.
பொருளடக்கம் |
வானொலியில் [தொகு]
இலங்கை வானொலியில் இசைக்கச்சேரிகளை வழங்கியதோடு, பல மெல்லிசை பாடல்களையும் பாடியிருக்கிறார். ரூபவாகினி தொலைக்காட்சி, மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் முதற்தர கலைஞராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.
ஆசிரியப்பணி [தொகு]
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இசையாசிரியராக பணியாற்றிய இவர், பதவி உயர்வுபெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.
பட்டங்களும் விருதுகளும் [தொகு]
இவர், சுர ராகநய விநோத சுரபி, இலங்கை அரசின் கலாபூஷணம், கலைச்செம்மல் ஆகிய பட்டங்களையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இசைக்கச்சேரிகள் [தொகு]
இவர் இலங்கையில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை வழங்கியிருக்கிறார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ திலகநாயகம் போல் அவர்களின் இறப்பு அறிவித்தல், உதயன், டிசம்பர் 7, 2009