இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம்
| வகை | ஒளிபரப்பாக்கம் (ரூபவாகினி, செனல் ஐ, நேத்ரா டீ.வி மற்றும் என்.டீ.வி) |
|---|---|
| நாடு | இலங்கை |
| ஒலிபரப்பு வீச்சு | தேசிய அளவில் |
| நிறுவியது | இலங்கை அரசாங்கம் (இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் 1982 ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டம்) |
| உரிமையாளர் | இலங்கை அரசாங்கம் |
| முக்கிய மனிதர்கள் | மொகான் சமரநாயக்க (தவிசாளர்) |
| துவக்கப்பட்ட நாள் | பெப்ரவரி 14, 1982 |
| Picture format | PAL |
| இணையதளம் | http://www.rupavahini.lk |
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், இலங்கையின் பொது நிதியில் நடாத்தப்படும் தேசிய தொலைக்காட்சி ஆகும். கல்வி [சான்று தேவை] மற்றும் பயன்தரும் [சான்று தேவை] தகவல்களை வழங்குவதற்காக இது யப்பான் மக்களால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
1982 ஆம் ஆண்டின் இல. 6ம் நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் தேசியத் தொலைகாட்சிச் சேவையாக நிறுவப்பட்டது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நிகழ்ச்சிகள் தொகுத்து/தயாரித்து ஒளிபரப்பப் படுகின்றன.
ரூபவாகினி, சனல் ஐ ஆகிய இரண்டு அலைவரிசைகளில் தொழிற்படுகிறது. இவ்விரண்டு அலை வரிசைகளும் இலக்க முறை (அ) எண்மருவி (Digital) அல்லாது அனலொக் (அ) அலைமருவி (Analogue) முறையையே பயன்படுத்துகின்றன.
இது, இலங்கை அதிபரால் (சனாதிபதி) நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் நடாத்தப்படும் ஒரு நிறுவனமாகும். இதன் முழுமையான மேலாண்மை/முகாமைத்துவம் இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்ட உயரதிகாரி ஒருவரிடமே (Director-General) இருக்கும். நிகழ்ச்சிகளுக்கும் ஒளிபரப்புகளுக்குமான நிதி விளம்பரங்கள் மூலமும் அரச மானியங்கள் மூலமும் பெறப்படுகிறது.
இவற்றையும் பார்க்க [தொகு]
- சுயாதீன தொலைக்காட்சி
- டி என் எல், இலங்கை
- சனல் வன் எம்.டி.வி
- ஆர்ட் ரிவி, இலங்கை
- சக்தி TV
- சிரச TV
- சுவர்ணவாகினி
- தெரண
- யங் ஏசியா தொலைக்காட்சி
வெளி இணைப்புகள் [தொகு]
- இலங்கைத் தேசிய தொலைகாட்சி அணுகப்பட்டது 13 ஜூன் 2008 (ஆங்கிலத்தில்)
- இலங்கை ரூபவாஹினி நிகழ்சிநிரல் அணுகப்பட்டது 13 ஜூன் 2008 (ஆங்கிலத்தில்)
- இலங்கை ஐ அலைவரிசை நிகழ்சிநிரல் அணுகப்பட்டது 13 ஜூன் 2008 (ஆங்கிலத்தில்)
|
|||||