திருவண்ணாமலை அம்மணி அம்மாள் சித்தர் பீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவண்ணாமலை அம்மணி அம்மாள் சித்தர் பீடம்
பெயர்
பெயர்:திருவண்ணாமலை அம்மணி அம்மாள் சித்தர் பீடம்
அமைவிடம்
மாவட்டம்:திருவண்ணாமலை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அம்மணி அம்மாள்
சிறப்பு திருவிழாக்கள்:ஜெயந்தி விழா, குருபூசை, கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை அம்மணி அம்மாள் சித்தர் பீடம் என்பது திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அம்மணி அம்மாள் கோயிலாகும். இந்தக் கோயில் சித்தர் ஜீவ சமாதி கோயிலாகும். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. இம்மடத்தில் கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் புகழ்பெற்றதாகும்.

சந்நிதிகள்[தொகு]

விநாயகர் சந்நிதி

இக்கோயிலில் தனி விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. கன்னி மூலையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜீவசமாதி[தொகு]

அம்மணி அம்மாள் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர். திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, அதனைக் கட்ட எண்ணம் கொண்டார்.

கோயில் மூலவர் அம்மணி அம்மாள்

இதற்காகப் பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது. இவர் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்ய‌ லிங்கத்தின் எதிரே ஜீவ சமாதி அடைந்தார். [1]

அவதார‌ திருநாள்[தொகு]

1735 ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் ஆயி அம்மாள், கோபால் பிள்ளை தம்பதிக்கு மார்கழி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார்.

விழாக்கள்[தொகு]

கார்த்திகை தீபமன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அம்மணி அம்மாளின் ஜீவசமாதியில் நெய்தீபம் ஏற்றப்படுகிறது. இந்த ஜீவ சமாதி மடத்தின் முன்பு பக்தர்கள் தீபம் ஏற்படுத்தி வழிபடுகின்றார்கள்.

ஆதாரங்கள்[தொகு]