தா. நா. அனந்தகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தா. நா. அனந்தகிருட்டிணன்
பிறப்புதாரகாடு நாராயணன் அனந்தகிருட்டிணன்
(1925-12-15)15 திசம்பர் 1925
பாலக்காடு மாவட்டம், கேரளா
இறப்பு7 ஆகத்து 2015(2015-08-07) (அகவை 89)
நியூ செர்சி, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
கல்வி கற்ற இடங்கள்[[சென்னைக் கிருத்துவக் கல்லூரி]]
தாக்கம் 
செலுத்தியோர்
ம. சு. மணி, பூச்சியியல் நிபுணர்
துணைவர்
மேனகா (தி. 1950)
பிள்ளைகள்2

தாரகாடு நாராயணன் அனந்தகிருட்டிணன் (15 டிசம்பர் 1925 - 7 ஆகஸ்ட் 2015) என்பவர் இந்தியப் பூச்சியியல் வல்லுநர் மற்றும் பூச்சி சூழலியல் நிபுணர் ஆவார். இவரது சிறப்பு ஆய்வுகள் ஆனைக்கொம்பன் பூச்சிகள் (செசிடாலஜி) மற்றும் வேதி சூழலியல் குறித்ததாகும். இவர் இந்திய இலைப்பேன்கள் (தைசனோப்டெரா ) குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தாரகாடில் அனந்தகிருட்டிணன், தா. கே. நாராயணன் மற்றும் தா. ஏ. அன்னபூரணி ஆகியோரின் மூத்த மகனாகத் திசம்பர் 15 1925ஆம் ஆண்டு பிறந்தார். மங்களூர் மற்றும் பாலக்காட்டில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், சென்னை, சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆராய்ச்சி மூலம் முதுநிலை அறிவியல் படிப்பினை முடித்தார்.[2] பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் மற்றும் டி. எஸ்சி. பட்டம் பெற்றார்.[2]

தொழில்[தொகு]

அனந்தகிருட்டிணன் சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் தனது கற்பித்தல் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 1948 வரை சென்னை, இலயோலாக் கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பு வரை இங்கு விலங்கியல் விரிவுரையாளராக இருந்தார். இலயோலா கல்லூரியில், இவர் விலங்கியல் விரிவுரையாளராகவும் துறைத் தலைவராகவும் இருந்தார். மேலும் 1968ஆம் ஆண்டு பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனத்தினை கல்லூரியில் நிறுவி அதன் இயக்குநராகப் பதவியேற்றார்.[3] இவர் சென்னையில் உள்ள இலயோலா கல்லூரி வளாகத்திற்குள் செயல்படும் இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தின் இயக்குநராக 1977ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார்.[2] இவர் ஐந்து ஆண்டுகள் இப்பணியிலிருந்தார்.

இந்தியப் பூச்சியியல் வல்லுநர் எம்.எஸ்.மணி[4] மற்றும் எம். ஏகாம்பரநாதன் (விலங்கியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை). டி. வி. ராமகிருட்டிண அய்யர் மற்றும் ஒய். ராமச்சந்திர ராவ் ஆகியோர் பூச்சிகளைப் படிக்க ஈர்த்தார்.[5] ஆரம்பக்கால ஆதரவை பி.எல். 480 மூலம் பெற்ற இவர், இந்திய ஆனைக்கொம்பன் குறித்த ஆய்வினை மூன்று தசாப்தங்களாக மேற்கொண்டார்.

1990களின் பிற்பகுதியிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பூச்சியில் குறித்த கருத்தரங்கினை நடத்தினார்.[6]

வெளியீடுகள்[தொகு]

அனந்தகிருட்டிணன் ஆனைக்கொம்பன் குறித்து ஏராளமான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.[7] நடப்பு அறிவியல், பூச்சியியல் செய்தி மடல், இந்திய விலங்கியல் ஆய்வு இதழ், பூச்சியியல் பற்றிய ஆண்டு ஆய்வு, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி இதழ், தாவர பாதுகாப்புக்கான இந்திய இதழ் உள்ளிட்ட பல ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[2][5]

விருதுகள்[தொகு]

அனந்தகிருட்டிணன் இந்திய அறிவியல் கழகம், இந்திய இயற்கை அறிவியல் கழகம் மற்றும் இந்திய வேளாண்மை அறிவியல் கழகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.[8] இவருக்கு 1998ஆம் ஆண்டில் டாக்டர் கே.வி. மேத்தா நினைவு விருதும் 2000ஆம் ஆண்டில் ஜே.சி.போஸ் நினைவு விருதும் வழங்கப்பட்டது.[9]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அனந்தகிருட்டிணன் 1950இல் தாரகாட்டைச் சேர்ந்த மேனகாவை மணந்தார். இவர்களுக்கு ராணி மற்றும் ராம்தாஸ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தீவிர துடுப்பாட்ட ரசிகராக இருந்த இவர் இலயோலா கல்லூரி கல்வி மற்றும் பொதுப் பணியாளர்கள் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.[2] இவர் 7 ஆகஸ்ட் 2015 அன்று நியூ ஜெர்சியில் காலமானார்.[சான்று தேவை]

தாக்கங்கள்[தொகு]

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சக தைசனோப்டெரிஸ்டுகள் பல புதிய வகை ஆனைக்கொம்பன்களுக்கு இவரது பெயரினை இட்டுள்ளனர்.[2] ஜி.எஸ். கில் ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர் தா. நா. அனந்தகிருட்டிணன் அறக்கட்டளை விருதை ஒரு இளம் இந்தியப் பூச்சியியல் வல்லுநருக்கு இந்தியாவில் பூச்சியியல் துறையில் செய்த பணிகளுக்காக வழங்குகிறது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Entomologist Hailed". தி இந்து. 2005-12-05. http://www.thehindu.com/2005/12/05/stories/2005120517670800.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Raman, Ananthanarayanan (2014). "T.N.Ananthakrishnan, Living Legends in Science". Current Science 106. http://www.currentscience.ac.in/Volumes/106/05/0749.pdf. 
  3. "About Entomology Research Institute". Archived from the original on 2019-11-21. பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
  4. "Naturalists of India". Frontline. பார்க்கப்பட்ட நாள் 2017-03-05.
  5. 5.0 5.1 Raman, Ananthanarayanan (2015). "T.N.Ananthakrishnan, Personal News". Current Science 109. http://www.currentscience.ac.in/Volumes/109/05/0981.pdf. 
  6. "Meeting Report" (PDF). Current Science. பார்க்கப்பட்ட நாள் 2017-03-05.
  7. ""T.N. Ananthakrishnan" - Google Search". www.google.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
  8. "Fellow Profile". Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 2017-02-26.
  9. "PM presents awards to 21 scientists". தி இந்து. 2000-01-04. Archived from the original on 2018-10-02. பார்க்கப்பட்ட நாள் 2017-03-05.
  10. Entomologists, Association of. "Welcome to Association of Entomologists". www.associationofentomologists.com (in ஆங்கிலம்). Archived from the original on 2017-03-15. பார்க்கப்பட்ட நாள் 2017-03-05.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._நா._அனந்தகிருட்டிணன்&oldid=3557565" இலிருந்து மீள்விக்கப்பட்டது