ஜூமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாமின் தேயிலைத் தோட்ட பழங்குடியினரின் ஜுமெர் நடனம்

ஜூமெர் அல்லது ஜூமர் (Jhumair) என்பது இந்திய மாநிலங்களான பீகார், சார்க்கண்டு, சத்தீசுகர், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த ஒரு இந்திய நாட்டுப்புற நடனமாகும். [1] [2] இது சோட்டா நாக்பூர் பிராந்தியத்தின் பழங்குடியினர் அல்லாத சதான் இன மக்களின் நாட்டுப்புற நடனமாகும். [3] [4] [5] இது அசாமின் தேயிலைத் தோட்ட சமூகத்தினரிடையே மிகவும் பிரபலமானது. [6]

வரலாறு[தொகு]

பீம்பேட்காவில் இடைக் கற்காலத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் ஓவியங்கள்

ஜுமெர் ஒரு பழங்கால நாட்டுப்புற நடனமாகும். பீம்பேட்கா பாறை வாழிடங்களின் இடைக் கற்கால ஓவியங்களில் இதே போன்ற நடனம் காணப்படுகிறது.

செயல்திறன்[தொகு]

ஜுமெர் என்பது அறுவடை மற்றும் பண்டிகைகளில் நிகழ்த்தப்படும் ஒரு சமூக நடனமாகும். [7] நடனம் பெரும்பாலும் திறந்த வெளிகளில் நிகழ்த்தப்படுகிறது. தோல், மந்தர், பன்சி, நகரா, தாக் மற்றும் செனாய் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

பாடல் வரிகள்[தொகு]

ஜுமெரின் வரிகள் அன்றாட மொழிகளில் கட்மைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையின் காதல் அல்லது இன்பங்கள் மற்றும் வேதனைகளை சித்தரிக்கின்றன.

வகைகள்[தொகு]

சோட்டா நாக்பூர் பகுதியில் ஜுமரின் பல்வேறு வகைகள் உள்ளன:

  • நாக்புரி ஜூமர்
  • கோர்தா ஜுமர்

வெவ்வேறு பிராந்தியத்தைச் சேர்ந்த ஜுமெர் / ஜுமர் ஒன்றுக்கொன்று வேறுவேறு பாணியில் வேறுபடுகிறது. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jhumari Dance". dance.anantagroup.
  2. "Jhumar and other popular folk dances of Jharkhand". mythicalindia.
  3. "Encyclopædia Mundarica, Volume 2". books.google.com.
  4. "Out of the Dark". democratic world.in.
  5. "talk on nagpuri folk music at ignca". https://www.dailypioneer.com/2018/state-editions/talk-on-nagpuri-folk-music-at-ignca.html. 
  6. "Karam Puja". assaminfo.
  7. http://www.dance.anantagroup.com/jhumari-dance/
  8. "Out of the Dark". democratic world.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூமர்&oldid=3129985" இலிருந்து மீள்விக்கப்பட்டது