ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி | |
|---|---|
1920களில் கிருஷ்ஹ்ணமூர்த்தி |
|
| பிறப்பு | மே 12, 1895 மதனப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| இறப்பு | பெப்ரவரி 17 1986 (அகவை 90) கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
| பணி | பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர் |
| பெற்றோர் | நாராயணைய்யாம் சஞீவம்மா ஜிட்டு |
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, (தெலுங்கு: జిడ్డు కృష్ణ మూర్తి) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 12, 1895–பெப்ரவரி 17, 1986), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்;
அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.[1]