சோடியம் பைசல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பைசல்பேட்டு
One sodium cation and one hydrogensulfate anion
One sodium cation and one hydrogensulfate anion
Ball-and-stick model of the component ions
Ball-and-stick model of the component ions
Sodium bisulfate, as a white powder, turns indicator paper red.
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஐதரசன் சல்பேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் அமில சல்பேட்டு
சோடாவின் பைசல்பேட்டு
இனங்காட்டிகள்
7681-38-1 Y
10034-88-5 (ஒற்றை ஐதரேட்டு) Y
ChemSpider 56397 Y
EC number 231-665-7
InChI
  • InChI=1S/Na.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+1;/p-1 Y
    Key: WBHQBSYUUJJSRZ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Na.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+1;/p-1
    Key: WBHQBSYUUJJSRZ-REWHXWOFAO
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 516919
வே.ந.வி.ப எண் VZ1860000
SMILES
  • [Na+].[O-]S(=O)(=O)O
பண்புகள்
NaHSO4
வாய்ப்பாட்டு எடை 120.06 கி/மோல் (நீரற்ற)
138.07 கி/மோல் (ஒற்றைஐதரேட்டு)
தோற்றம் வெண்ணிறத்திண்மம்
அடர்த்தி 2.742 கி/செமீ3 (நீரற்ற)
1.8 கி/செமீ3 (ஒற்றைஐதரேட்டு)
உருகுநிலை 58.5 °C (137.3 °F; 331.6 K) (ஒற்றைஐதரேட்டு)
315 °செல்சியசு (நீரற்ற)
கொதிநிலை decomposes to Na2S2O7 (+ H2O) at 315 °C (599 °F; 588 K)
28.5 g/100 mL (25 °C)
100 g/100 mL (100 °C)
கரைதிறன் அம்மோனியாவில் கரைவதில்லை
காடித்தன்மை எண் (pKa) 1.99
கட்டமைப்பு
படிக அமைப்பு மும்மைச்சாய்வு (நீரற்ற)
ஒற்றைச்சாய்வு (ஒற்றைஐதரேட்டு)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R34 R37 R41
S-சொற்றொடர்கள் S26 S36 S37 S39 S45
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாதது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் பைசல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

சோடியம் பைசல்பேட்டு (Sodium bisulfate) சோடியம் ஐதரசன் சல்பேட்டு எனவும் அழைக்கப்படும்,[1] பைசல்பேட்டு எதிரயனியின் சோடியம் உப்பு ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு NaHSO4 ஆகும். சோடியம் பைசல்பேட் என்பது சோடியம் காரத்திற்குச் (பொதுவாக இது சோடியம் ஹைட்ராக்சைடு அல்லது சோடியம் குளோரைடு வடிவத்தில் இருக்கும்) சமமான சல்பூரிக் அமிலத்தின் பகுதியளவு நடுநிலைப்படுத்தலால் உருவாகும் ஒரு அமில உப்பு ஆகும். இது உலர்ந்த குருணை போன்ற விளைபொருள் ஆகும், இதைப் பாதுகாப்பாக சேமிக்கவும், அனுப்பவும் முடியும். நீரற்ற வடிவமானது நீர் உறிஞ்சும் திறன்கொண்டது ஆகும். சோடியம் பைசல்பேட்டின் 1M கரைசல்கள் pH மதிப்பு ஒன்றைக் கொண்ட அமிலத்தன்மை கொண்டவை ஆகும்.

உற்பத்தி[தொகு]

சோடியம் பைசல்பேட் மான்கீம் செயல்முறையில் ஒரு இடைநிலைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது, இந்த செயல்முறையானது சோடியம் குளோரைடு மற்றும் சல்பூரிக் அமிலத்தின் வினையை உள்ளடக்கிய ஒரு தொழில்துறை செயல்முறையாகும்:[2]

NaCl + H 2 SO 4 → HCl + NaHSO 4

இந்த படிநிலையானது மிகவும் வெப்பம் உமிழ் வினையாகும். திரவ சோடியம் பைசல்பேட் தெளிக்கப்பட்டு குளிர்விக்கப்படுவதால் அது திடமான மணிகளை உருவாக்குகிறது. ஹைட்ரஜன் குளோரைடு வாயு நீரில் கரைக்கப்பட்டு ஐதரோகுளோரிக் அமிலமானது வினையின் பயனுள்ள துணை விளைபொருளாக உருவாக்கப்படுகிறது.

வணிக ஆர்வம் இல்லை என்றாலும், சோடியம் பைசல்பேட்டு பல கனிம அமிலங்களின் உற்பத்தியின் துணை விளைபொருளாக அவற்றின் சோடியம் உப்புகளின் வினை மூலம் மிகையான சல்பூரிக் அமிலத்துடன் உருவாக்கப்படலாம்:

NaX + H 2 SO 4 → NaHSO 4 + HX (X - = CN -, NO 3 -, ClO 4 - )

உற்பத்தி செய்யப்படும் HX அமிலங்கள் வினைபடு பொருள்களைக் காட்டிலும் குறைந்த கொதிநிலையைக் கொண்டிருக்கின்றன மற்றும் வாலைவடித்தல் மூலம் வினைக் கலவையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.

வேதியியல் வினைகள்[தொகு]

ஐதரேற்றம் செய்யப்பட்ட சோடியம் பைசல்பேட் 58 °C (136 °F) வெப்பநிலையில் அதனோடு இணைக்கப்பட்ட நீர் மூலக்கூறுகளிடமிருந்து பிரிகிறது. மீண்டும் குளிர்விக்கப்பட்டவுடன், இது புதிதாக நீர் உறிஞ்சும் தன்மையுடையதாக மாறிவிடுகிறது. சோடியம் பைசல்பேட்டை 280 °C (536 °F) வெப்பப்படுத்தும் போது சோடியம் பைரோசல்பேட்டை உருவாக்குகிறது. இது நிறமற்ற மற்றொரு உப்பு:[2]

2 NaHSO 4 → Na 2 S 2 O 7 + H 2 O.

பயன்கள்[தொகு]

சோடியம் பைசல்பேட் முதன்மையாக pH ஐக் குறைக்கப் பயன்படுகிறது. தொழில்நுட்ப தர பயன்பாடுகளுக்கு, இது உலோகத்தை பண்படுத்துதல், சுத்தம் செய்வதற்கான காரணிகள்,[3] நீச்சல் குளங்கள் மற்றும் சூடான தொட்டிகளில் திறன்மிக்க குளோரினேற்றத்திற்காக நீரின் pH ஐ குறைக்க பயன்படுத்தப்படுகிறது. சோடியம் பைசல்பேட் ஆனது விலங்கு உணவுகள் உட்பட பொது பயன்பாட்டு தீவன சேர்க்கையாக AAFCO வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பூனைகளில் சிறுநீர் கற்களைக் குறைக்க இது சிறுநீர் அமிலப்படுத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது குறைந்தது சில முள்ளெலித்தோலிகளுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடையது.

படிக கழிப்பறைக் கோப்பை துப்புரவுப் பொருள்களில் சோடியம் பைசல்பேட் முதன்மையான செயல்படு உட்பொருள் ஆகும்.[4]

ஜவுளித் தொழிலில், இது சில நேரங்களில் பட்டின் இணைப்பொருள்கள் மற்றும் செல்லுலோசை அடிப்படையாகக் கொண்ட இழை (ரேயான், பருத்தி, சணல், முதலியன) கொண்டு தயாரிக்கப்பட்ட வெல்வெட்டுடன் "எரிந்து மிச்சமான வெல்வெட் "ஐ உருவாக்க பயன்படுத்தப்படுகிறது: சோடியம் பைசல்பேட், அத்தகைய துணியில் பூசப்பட்டு அதை வெப்பப்படுத்தும் போது, செல்லுலோஸ் அடிப்படையிலான இழைகளை உடையக்கூடியவையாகவும், செதில்களாகவும் மாறச் செய்கின்றன. இதன் விளைவாக, முடிக்கப்பட்ட பொருட்களில் எரிந்த பகுதிகள் விடப்பட்டு பொதுவாக கவர்ச்சிகரமான வடிவமைப்புகளை உருவாக்குகின்றது.[5]

உணவுத் தொழிலில்[தொகு]

சோடியம் பைசல்பேட்டு ரொட்டித் தொழிலில் ரொட்டிகளை மென்மையாக்கவும், உப்பச் செய்யவும் பயன்படும் ரொட்டிக் கலவைகளில் உணவுச் சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[6]

சோடியம் பைசல்பேட்டு புளிப்புச் சுவையின்றியே pH மதிப்பைக் குறைப்பதால் இது வணிகரீதியில் கிடைக்கக் கூடிய சிட்ரிக், மாலிக், பாசுபாரிக் அமிலங்களுக்கு மாற்றாகப் பயன்படுகிறது[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. The prefix "bi" in "bisulfate" comes from an outdated naming system and is based on the observation that there is two times as much சல்பேட்டு (SO4) in sodium bisulfate (NaHSO4) and other bisulfates as in சோடியம் சல்பேட்டு (Na2SO4) and other sulfates.
  2. 2.0 2.1 Helmold Plessen (2000). "Sodium Sulfates". Ullmann's Encyclopedia of Industrial Chemistry (Weinheim: Wiley-VCH). doi:10.1002/14356007.a24_355. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3527306732. 
  3. John Toedt, Darrell Koza, Kathleen Van Cleef-Toedt Chemical Composition of Everyday Products p.147
  4. SANI-FLUSH® Powder (Discontinued), Reckitt Benckiser.
  5. Margo Singer (11 July 2007). Textile Surface Decoration: Silk and Velvet. University of Pennsylvania. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-2000-1. https://books.google.com/books?id=cTC8oKysf_0C&pg=PA35. 
  6. "GRAS Notice 000003: Sodium bisulfate - FDA" (PDF). FDA.
  7. "Water Acidification" (PDF). Archived from the original (PDF) on 2018-09-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பைசல்பேட்டு&oldid=3584625" இலிருந்து மீள்விக்கப்பட்டது