செருடன் பச்சைக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருடன் பச்சைக்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
குளோரோப்சிசு
இனம்:
கு. செருதோனி
இருசொற் பெயரீடு
குளோரோப்சிசு செருதோனி
(பிளைத், 1844)
வேறு பெயர்கள்

குளோரோப்சிசு கோச்சின்சினென்சிசு செருதோனி

ஒரு ஆண் ஜெர்டனின் இலைப்பறவை குளிக்கிறது.

செருடன் பச்சைக்குருவி (Jerdon's leafbird)(குளோரோப்சிசு செருதோனி) என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள காடு மற்றும் மரங்களடர்ந்த பகுதிகளில் காணப்படும் பச்சைக்குருவி சிற்றினமாகும். இதன் பெயர் தாமஸ் சி. ஜெர்டனைப் நினைவுபடுத்துகின்றது.[2] இது பாரம்பரியமாக நீல-சிறகுகள் கொண்ட பச்சைக்குருவியின் (சி. கொச்சின்சினென்சிசு) துணையினமாகக் கருதப்படுகிறது. ஆனால் இவற்றின் அளவு மற்றும் உருவ அமைப்பில் வேறுபடுகிறது. இதற்கு நீல நிற பறக்கும் இறகுகள் இல்லை.

இந்தியாவின் அங்கோலாவில் உள்ள ஆண் பறவை

விளக்கம்[தொகு]

இது ஒரு மரத்தில் கூடு கட்டி, 2 முதல் 3 முட்டைகள் வரை இடுகிறது. இந்த சிற்றினம் பூச்சிகள், பழங்கள் மற்றும் தேன் சாப்பிடுகிறது.

ஆண் பறவை மஞ்சள் நிற தலை, கருப்பு முகம் மற்றும் தொண்டையுடன் பச்சை-உடல் உடையது. இது நீல நிற மீசைக் கோடு கொண்டது. பெண் பறவையானது பச்சை நிறத் தலை மற்றும் நீல தொண்டையைக் கொண்டிருப்பதால் ஆண் பறவையிலிருந்து வேறுபடுகிறது. மேலும் இளம் பறவைகள் பெண் பறவை போன்று நீல தொண்டை இணைப்பு இல்லாமல் இருக்கும்.

பிற பச்சைப் பறவை போலவே, செருடனின் பச்சைப்பறவையின் ஒலியும் பல்வேறு வகையான பறவைகளின் ஒலிகளின் செழுமையான கலவையைக் கொண்டுள்ளது. இவை தண்ணீர் அருகே நீர் அருந்த மட்டுமே வரும். நீரைக் குடித்துவிட்டு விரைவாக ஓடிவிடும்.

கேரளாவின் கண்ணூரில் பெண் பச்சைப்பறவை

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Chloropsis jerdoni". IUCN Red List of Threatened Species 2016: e.T22732257A95045111. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22732257A95045111.en. https://www.iucnredlist.org/species/22732257/95045111. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. பக். 180–181. https://archive.org/details/whosebirdmenwome0000beol. 

மேலும் காண்க[தொகு]

  • BirdLife Species Factsheet. BirdLife International. Accessed 2008-06-25.
  • Wells, D. R. (2005). Chloropsis jerdoni (Jerdon's Leafbird). P. 264 in: del Hoyo, J., A. Elliott, & D. A. Christie. eds. (2005). Handbook of the Birds of the World. Vol. 10. Cuckoo-shrikes to Thrushes. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருடன்_பச்சைக்குருவி&oldid=3580642" இலிருந்து மீள்விக்கப்பட்டது