சென்னையின் மக்கள்தொகையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சென்னையின் சமயங்கள் (2011)[1]

  சைனம் (1.11%)
  பிற சமயங்கள் (0.04%)
  குறிப்பிடவில்லை (0.83%)

சென்னையின் மக்கள்தொகையியல் (Demographics of Chennai) மும்பை, தில்லி, கொல்கத்தா நகரங்களைப் போல பல்வேறு இனம், மதங்களைச் சேர்ந்த பல்வேறு மக்கள் சமூகங்களை கொண்டதாகும்.[2] 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையின் மொத்த மக்கள் தொகை சதுர கிலோமீட்டருக்கு 26,902 பேர் என்ற அடர்த்தி அடிப்படையில் மொத்த மக்கள் தொகை 4,681,087 பேர் ஆகும். இதில் பாலின விகிதமாக 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் இருந்தனர். சென்னை மக்களின் கல்வியறிவு சதவீதம் 90.33 ஆகவும் இருந்தது.[3] தமிழ் மற்றும் ஆங்கிலம் இங்குள்ள மக்களால் அதிகம் பேசப்படும் மொழிகளாகும். இந்து மதத்தை பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகின்றனர். இதையடுத்து முறையாக இசுலாம் மற்றும் கிறித்துவம், சீக்கியம், சைனம், பௌத்தம் மற்றும் சௌராசுட்டிரம் ஆகிய பிற மதங்களும் இங்கு பின்பற்றப்படுகின்றன.

கணக்கெடுப்பின் வரலாறு[தொகு]

சென்னை நகரத்தின் மக்கள்தொகை
Census Pop.
18713,97,552
18814,05,8482.1%
18914,52,51811.5%
19015,09,34612.6%
19115,18,6601.8%
19215,26,9111.6%
19316,47,23222.8%
19417,77,48120.1%
195114,16,05682.1%
196117,29,14122.1%
197124,69,44942.8%
198132,66,03432.3%
199138,41,39617.6%
200143,43,64513.1%
201146,81,0877.8%
ஆதாரங்கள்:
* 1639–1791:[4]
* 1871–1901:[5]
* 1871–1931:[6]
* 1931–1951:[7]
* 1951–1961:[8]
* 1991–2001:[9]
* 2001–2011:[10]

1639 மற்றும் 1648 ஆம் ஆண்டுகளுக்கான வருவாய் ஒப்பீடுகளின் அடிப்படையில் 1639 ஆம் ஆண்டில் அதாவது சென்னை நிறுவப்பட்ட ஆண்டில் இதன் மக்கள்தொகை 7,000 என கணக்கிடப்பட்டுள்ளது.[4] கேப்டன் தாமசு போவ்ரே 1670 ஆம் ஆண்டில் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகள் என்ற புத்தகத்தில் நகரத்தின் மக்கள்தொகைக்கான ஆரம்ப மதிப்பீடுகளில் ஒன்றைத் தருகிறார்.[4] அவரது கூற்றுப்படி, சென்னையில் அப்போது 300 ஆங்கிலேயர்கள் மற்றும் 3,000 போர்த்துகீசியர்கள் உட்பட 30,000 மக்கள் இருந்தனர். 1718 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய தீவுகள் மற்றும் பெர்சியாவின் புதிய அறிக்கை ஒன்றில் அலெக்சாண்டர் ஆமில்டன் பின்வருமாறு எழுதுகிறார்.

குடியேற்றப் பகுதி நிறைய மக்கள் வசிக்கும் பகுதியாக இருக்கிறது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் கணக்கிட்டால் மொத்தம் 80,000 மக்கள் இருப்பதாகக் கணக்கிடலாம். மேலும் இங்கு பொதுவாக சுமார் 4,500 ஐரோப்பியர்கள் வசிக்கின்றனர்[11]

சென்னை நகரத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எடுக்கும் யோசனை முதலில் எலிகூ யேல் காலத்தின் போது முன்வைக்கப்பட்டது. சிறிது காலம் கைவிடப்பட்ட பின்னர், 1801 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் அகில இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏற்பாடு செய்ய முடிவு செய்தபோது மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. 1795 ஆம் ஆண்டில் நகரத்தின் பிளாக்டவுன் பகுதியின் (தற்போது சியார்ச்சுடவுன்) முதல் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது அப்பகுதியின் மக்கள் தொகை 60,000 ஆக தீர்மானிக்கப்பட்டது.[4] 1822 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, சென்னையின் மக்கள் தொகை 462,051 ஆகவும், 1863 ஆம் ஆண்டு சென்னை நகரத்தில் ஒரு மில்லியனுக்கும் குறையாத மக்கள் இருந்ததாகவும் சார்லசு திரெவல்யன் அரசு சுகாதார ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.[11] குறிப்பிடத்தக்கவர்களான சர் வில்லியம் லாங்கோர்ன் மற்றும் எலிகூ யேல் போன்ற சில தனிநபர்களின் மக்கள் தொகை மதிப்பீடுகளும் உள்ளன. 1871 ஆம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றாலும், 1851-52 முதல் 1866-67 வரை 4 ஆண்டு இடைவெளிகளில் நகரத்தின் சிறிய மக்கள் தொகை எண்ணிக்கை சென்னை அரசால் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த ஆரம்ப மதிப்பீடுகள் மற்றும் பயன்படுத்தப்படும் முறைகள் பின்னர் வந்த மக்கள்தொகை கணக்காளர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளன. ஆரம்பகால கணக்கீடுகள் முழுமையான கணக்கெடுப்புகள் அல்ல. அவை "துணை பிராந்திய பாலியல் விநியோகத்திற்கு அப்பால் அமைந்த சிறிய தகவல்களை வழங்கும் எளிய தலைஎண்ணிக்கைகள்" என்று மக்கள் தொகை விஞ்ஞானி கிறிசுடோப் கில்மோட்டோ கூறினார். பிரித்தானிய இந்தியாவில் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பான 1871 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது சென்னை கண்காணிப்பாளராக இருந்த டபிள்யூ.ஆர். கார்னிசு பின்வருமாறு எழுதினார்,

.... 1867 ஆம் ஆண்டுக்கு முந்தைய சென்னை மக்கள் தொகையின் மதிப்பீடுகள் பல்வேறு வகைப்பட்டவை. 1822, 1863 ஆம் ஆண்டுகளின் நேரடிக் கணக்கெடுப்புகள் நம்பத்தகுந்தவை அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. நகரத்தில் வாழும் மக்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து திருப்திகரமான முடிவு எதுவும் இல்லை என்பது நீண்ட காலமாகவே காணப்பட்டது.

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக 1871 ஆம் ஆண்டில் சென்னை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முதல் முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 1871 ஆம் ஆண்டில் மொத்த மக்கள்தொகை 397,552 ஆக இருந்தது. இது கொல்கத்தா மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக மாறியது. பிரித்தானியப் பேரரசின் ஐந்தாவது பெரிய நகரமாகவும் சென்னை இருந்தது.

மக்கள்தொகை வளர்ச்சி[தொகு]

1871 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 397,552 மக்கள்சென்னை நகரில் வசித்தனர்.1876-77 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தால் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.1877 ஆம் ஆண்டு மட்டும் 40,500 பேர் பாதிக்கப்பட்டனர்.[7] 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலையான வளர்ச்சி விகிதத்தில் இருந்தது. இருப்பினும் 1901 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சென்னையின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மெதுவாக இருந்தது.

மதம்[தொகு]

சென்னை மக்கள் தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நகரத்தில் கணிசமான அளவில் முசுலீம் மற்றும் கிறித்துதவ சிறுபான்மையினரும் உள்ளனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் 81.3 சதவீதமாகவும், முசுலீம்கள் 9.4 சதவீதமாகவும், கிறித்துவர்கள் 7.6 சதவீதமாகவும் இருந்தனர்.

மதங்கள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் (மொத்த மக்கள் தொகையின் சதவீதத்தில்)
கணக்கெடுப்பு இந்து முசுலீம் கிறித்துவர் சமணர் பௌத்தம் சீக்கியர் பிற கூறாதவர்
1901 80.6 11.3 8.0 0.05 0.02 0 0.02 0
1911 80.2 11.4 8.1 0 0 0 0.35 0
1921 81.2 10.1 8.4 0.2 0.1 0 0 0
1931 80.4 10.8 8.4 0.4 0.05 0 0 0
1941 79.9 12.3 5.9 0 0 0 2.31 0
1951 81.6 9.9 7.8 0.4 0.07 0.07 0.09 0
1961 85 7.5 6.9 0.5 0.02 0.04 0.07 0
1971 84.1 8.5 6.6 0.7 0.03 0.05 0.01 0
1981 84.4 8.1 6.4 0.7 0.1 0.04 0.06 0
1991 83.9 8.7 6.4 0.9 0.02 0.04 0.03 0
2001 81.3 9.4 7.6 1.1 0.04 0.06 0.23 0
2011[12] 80.73 9.45 7.72 1.11 0.06 0.06 0.04 0.83
இந்து மதம்

இந்து மதம் சென்னையில் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. சென்னை நகரின் ஒரு பகுதியாக உள்ள மைலாப்பூர், திருவல்லிகேனி, திருவொற்றியூர், சைதாபேட்டை மற்றும் திருவான்மியூர் ஆகிய கோயில்களை, நாயன்மார்கள் என்ற சைவ சமயப் துறவிகள் பார்வையிட்டனர். வயலார் நாயனார் என்ற மகான் மைலாப்பூரில் பிறந்து வளர்ந்தார். மைலாப்பூரின் விளக்கத்தை சம்பந்தர் தனது பாடல்களில் தந்திருப்பதாகவும் குறிப்புகள் உள்ளன. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த ஆரம்பகால மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது இந்திய வணிகர்கள் பக்தி கொண்ட இந்துக்கள். சென்னகேசவப் பெருமாள் கோயில், மதராசப்பட்டினத்தின் பிரதான இந்துக் கோயிலாகக் கருதப்பட்டது. 1640 ஆம் ஆண்டு நகரம் நிறுவப்பட்ட பின்னர் 1646 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பாளர் பெரி திம்மன்னாவால் முதன்முதலில் இக்கோயில் கட்டப்பட்டது. சென்னை ராமகிருட்டிண அமைப்பின் முக்கிய மையமாகவும் உள்ளது. இதன் பழமையான நிறுவனமான சிறீ ராமகிருட்டிண மடம் மே 1897 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. 1882 ஆம் ஆண்டு முதல், சென்னை மெய்யியல் சங்கத்தின் தலைமையகமாக இருந்து வருகிறது. இச்சங்கம் உலக மதங்கள் மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்மீக அமைப்பாகும். 1981 மதிப்பீட்டின்படி, சென்னை நகரில் சுமார் 600 இந்துக் கோயில்கள் இருந்தன. சென்னகேசவப் பெருமாள் கோயில், சென்ன மல்லேசுவரர் கோயில், கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி ஆண்டவர் கோயில், அசுட்டலட்சுமி கோயில், காளிகாம்பாள் கோவில் மற்றும் திருவள்ளுவர் கோவில் ஆகியவை அவற்றில் முக்கியமானவையாகும்.

இசுலாம்

கி.பி 9 ஆம் நூற்றாண்டிலிருந்து சென்னையில் முசுலீம்களின் இருப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள் - புலிகாட் மற்றும் கோவளத்தில் உள்ளவை கி.பி 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. 13ஆம் நூற்றாண்டில் மார்கோ போலோவும், 16ஆம் நூற்றாண்டில் டுவார்டே பார்பரோசாவும், செயின்ட் தாமசு கிறித்துவர்களாலும், மதராசு இசுலாமியர்களாலும் போற்றப்பட்டதாக பதிவுசெய்துள்ளனர்.

கிறித்துவம்

கிறித்துதவர்கள்களின் அதிக மக்கள்தொகை கொண்ட்ட முக்கிய இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்றாகும், இது நகரத்தின் மக்கள்தொகையில் 7.6% ஆகும்.

மொழிகள்[தொகு]

கணக்கெடுப்பு சென்னையின் தாய்-மொழிகள் (மொத்த மக்கள் தொகை சதவீதம்)
தமிழ் தெலுங்கு உருது மலையாளம் இந்தி குசராத்தி கன்னடா மராத்தி ஆங்கிலம் பிற
1901 61.2 21.3 10.1 0.2 0.1 0.3 0.4 1.2 3.1 0.71
1911 62.3 20.7 10.3 0.3 0 0.5 0.6 1.3 2.9 1.03
1921 63.9 19.8 8.8 0.8 0 0.6 0.6 1.3 2.7 1.59
1931 63.6 19.3 9.7 1.4 0.4 0.5 0.7 1.2 2.1 1.1
1941 NA NA NA NA NA NA NA NA NA NA
1951 67.9 19.3 6.3 2.8 1.6 0.6 1.1 0.8 1.3 1.1
1961 70.9 14.1 5.9 3.3 0.9 0.7 0.9 0.8 1.0 1.33
1971 73.7 12.0 5.7 3.7 1.3 0.8 0.7 0.7 0.6 0.68
1981 74.5 12.0 5.2 3.2 1.6 0.7 0.7 0.6 0.5 1.24
1991 76.7 10.5 4.8 3.2 2.1 0.7 0.6 0.5 0.3 0.58
மூலம்:இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு

சென்னையில் தமிழ் மிகவும் பொதுவான மொழியாகும். சுமார் 76.7% சென்னையில் வசிப்பவர்களின் தாய் மொழியாகும். இதைத் தொடர்ந்து தெலுங்கு (10.5%), உருது (2.8%), மலையாளம் (2.2%) மற்றும் இந்தி (2.1%) மொழிகள் பேசப்படுகின்றன. ஆங்கிலம் பொதுவாக தொழிலாளர்களால் இரண்டாவது மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.[13]. 1891 ஆம் ஆண்டில், தமிழ் பேசுபவர்களின் சதவீதம் 60.4% ஆகவும், தெலுங்கு 22.25% ஆகவும் இருந்தது. தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசுபவர்களின் சதவீதம் 1901 ஆம் ஆண்டில் 61.2 சதவீதத்திலிருந்து 1991 ஆம் ஆண்டில் 76.7 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தெலுங்கு பேசுபவர்களின் சதவீதம் 21.3 சதவீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்தது. இது 1901 முதல் 1991 வரையில் 10.5% ஆகவும், 1901 இல் 9.1 ஆக இருந்த உருது மொழி 1991 ஆம் ஆண்டில் 2.8 ஆகவும், ஆங்கிலம் 1901 ஆம் ஆண்டில் 3.1 ஆக இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் 0.3 சதவீதமாகவும் குறைந்துள்ளன.[14] 1953 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் உருவானவுடன், நகரத்திலிருந்து தெலுங்கு பேசுபவர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்ததே தெலுங்கு பேசும் மக்கள்தொகையின் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகும். 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ-இந்தியர்கள் ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டு சென்றனர். 1901 ஆம் ஆண்டில் ஒரு சில இந்தி மொழி பேசுபவர்கள் மட்டுமே சென்னையில் வாழ்ந்ததாகத் தெரிகிறது மற்றும் 1950 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு பதவியேற்கும் வரை அவர்கள் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், 1950 ஆம் ஆண்டு முதல், அவற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. 1871 ஆம் ஆண்டு சென்னையில் 60.2% தமிழ் மக்கள், 22.3% தெலுங்கு மக்கள் தொகை வாழ்ந்தனர். சில தமிழ் மக்கள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளனர். நகரத்தில் 200,000 குசராத்திகள் உள்ளனர்.[15]

இனக்குழுக்கள்[தொகு]

சமணர்கள்[தொகு]

சென்னை நகரத்தில் வட இந்திய சமணர்களைக் காட்டிலும் தமிழ் சமணர்கள் அதிகமாக உள்ளனர். வட இந்திய சமணர்களால் கட்டப்பட்ட நகரத்தில் சுமார் 100 சமணக் கோயில்கள் உள்ளன. அதேசமயம் 18 தமிழ் சமணக் கோயில்கள் மட்டுமே சுமார் 1,500 தமிழ் ஜெயின் குடும்பங்களுக்கு உணவளிக்கின்றன.[16]

நகரத்தில் உள்ள சீக்கிய குடும்பங்கள், சமணர்கள்களின் பொதுவான அம்சம் சிறப்பு சந்தர்ப்பங்கள் மற்றும் பண்டிகைகளின் போது ஒன்றுகூடுவது மட்டுமேயாகும்.[17]

பார்சிக்கள்[தொகு]

முதல் பார்சி இனத்தவர் 1809 ஆம் ஆண்டில் கூர்க்கிலிருந்து சென்னைக்கு வந்தார். அப்போது ஆளும் மன்னரின் சகோதரர் செயின்ட் சியார்ச்சு கோட்டையின் ஆளுநரிடம் ஒரு படத்தை வழங்க ஒரு பிரதிநிதியை அனுப்பினார். இரிசிபாய் மனேக்சி கராசு என்பவர்தான் நகரத்தில் இறங்கிய முதல் பார்சி ஆவார். இவருடன் மேலும் ஐந்து பார்சிகள் மற்றும் இரண்டு பாதிரியார்களும் வந்தனர். இப்பாதிரியார்களே இராயபுரத்தில் நிலம் வாங்கினர். 1900 ஆம் ஆண்டுகளில், பார்சிகள் பொதுவாக கார்கள், சைக்கிள்கள், வாசனை திரவியங்கள் மற்றும் சாயங்களைக் கையாள்வதில் செழிப்பானவர்களாக இருந்தனர். ஈரானியர்கள் 1900 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தனர். ஈரானிய சிற்றுண்டியகங்களுக்காக இவர் அறியப்பட்டனர். திரையரங்குகளை நிறுவினர். 1906 ஆம் ஆண்டு வரை 100 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சமூகத்தில் அதிகாரப்பூர்வ பாதிரியார் இல்லை. 1909 ஆம் ஆண்டில் ராயபுரம் நெருப்புக் கோயில் கட்டப்படும் வரை வழிபாட்டுத் தலமே இல்லாமல் இருந்தது.[18] 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னையில் சுமார் 250 பார்சிகள் இருந்தனர். அவர்களில் பலர் ராயபுரத்தில் வசிக்கின்றனர்.[19]

சப்பானியர்கள்[தொகு]

2013 ஆம் ஆண்டு நிலவரப்படி சென்னை நகரத்தில் சுமார் 800 சப்பானியர்கள் இருந்தனர்.[20]

கொரியர்கள்[தொகு]

1995 ஆம் ஆண்ட்டில் ஊண்டாய் நகரில் தொழிற்சாலைகளை திறக்க முடிவு செய்ததன் காரணமாக, இந்தியாவில் கொரிய சமூகத்தின் ஆரம்ப மையமாக சென்னை விளங்குகிறது. கொரியர்கள் பெரும்பாலும் கீழ்பாக்கத்தில் குவிந்துள்ளனர். இதன் விளைவாக இப்பகுதி "குட்டி கொரியா" என்ற புனைப்பெயரை பெற்றுள்ளது.[21] நகரத்தில் கொரிய சமூகம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. மேலும் 2009 ஆம் ஆண்டில், நகரத்தில் சுமார் 3,000 கொரியர்கள் இருந்தனர், இது 2006 இல் 700 ஆக இருந்தது.[22][23] அப்போதிருந்து, கொரியர்கள் சென்னையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினராக உள்ளனர்[24] 2013 ஆம் ஆண்டின் நிலவரப்படி நகரத்தில் 4,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கொரியர்கள் இருந்தனர். கொரியா வர்த்தக மைய அறிக்கையின்படி ஊண்டாய் மோட்டார்சு, சாம்சங், எல்ஜி, மற்றும் லோட்டே உட்பட 150 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் இங்கிருந்தன.[24] பல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், முக்கியமாக இயங்கூர்தி உதிரி பாகங்கள், தளவாடங்கள் மற்றும் பொறியியல் நிறுவனங்களான இக்வாசின், டோங்-சங் மற்றும் டூவோன் போன்றவை இந்த பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.[24] சென்னையில் உள்ள பல கொரியர்கள் ஊண்டாய் மோட்டார்சு மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களுக்காக வேலை செய்கிறார்கள் [23] சிலர் கொரிய உணவகங்களையும் திறந்துள்ளனர். இது பெரும்பாலும் உள்ளூர் இந்தியர்களைக் காட்டிலும் அவர்களின் சக இனத்தவர்களை இலக்காகக் கொண்டது.[25] கொரியர்கள் இந்தியாவில் பல கிறித்துதவ தேவாலயங்களை உருவாக்கியுள்ளனர். இவற்றில் இரண்டு சென்னையில் உள்ளன. புது தில்லியில் இரண்டும் மும்பையில் ஒன்றும் மற்ற தேவாலயங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population By Religious Community - Tamil Nadu" (XLS). Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  2. "The magic of melting pot called Chennai". The Hindu. 19 December 2011. http://www.thehindu.com/news/cities/chennai/article2728177.ece. 
  3. "Chennai City Population Census 2011 (provisional)". 2011 Census India. Census Organization of India. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
  4. 4.0 4.1 4.2 4.3 H. D. Love (1913). "Population of Madras". Vestiges of Old Madras, Vol 3. p. 557.
  5. Imperial Gazetteer of India, Volume 16. Clarendon Press. 1908.
  6. Mary Elizabeth Hancock (2008). The politics of heritage from Madras to Chennai. Indiana University Press. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-35223-1.
  7. 7.0 7.1 Muthiah, S. (2008). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1. Association of British Scholars, Chennai. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-468-8.
  8. SangyaSrivastava (2005). Studies in Demography. Anmol Publications PVT. LTD. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-1992-9.
  9. "Area and Population" (PDF). Chennai District Statistical Handbook. District Administration, Chennai. Archived from the original (PDF) on 30 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  10. "Tamil Nadu district wise population" (PDF). Census of Tamil Nadu. Archived from the original (PDF) on 2013-05-12. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  11. 11.0 11.1 Muthiah 2008, ப. 76-92.
  12. http://www.censusindia.gov.in/2011census/C-01/DDW33C-01%20MDDS.XLS
  13. "Population Of Chennai 2017". indiapopulation2017.in.
  14. "The Record News". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  15. "Navratri nights keep Gujaratis on their toes". The Times of India (Chennai: The Times Group). 10 October 2013. http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2013/10/10&PageLabel=4&EntityId=Ar00401&ViewMode=HTML. 
  16. Jain, Mahima (28 December 2013). "Tamil Jain?". The Hindu (Chennai). http://www.thehindu.com/features/magazine/tamil-jain/article5504164.ece. 
  17. "We call ourselves Tamilian Punjabis". The New Indian Express (Chennai: Express Publications). 25 March 2013. http://newindianexpress.com/cities/chennai/article1515452.ece. 
  18. "Parsi community celebrates 100 years of fire temple". தி இந்து (Chennai). 11 July 2010 இம் மூலத்தில் இருந்து 14 July 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100714233635/http://www.hindu.com/2010/07/11/stories/2010071162800500.htm. 
  19. Mathai, Kamini (12 July 2010). "Parsis go all out to celebrate milestone in Chennai". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Parsis-go-all-out-to-celebrate-milestone-in-Chennai/articleshow/6156672.cms. 
  20. Kamath, Vinay (15 April 2013). "Land of the rising yen". Business Line (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.com/industry-and-economy/land-of-the-rising-yen/article4619446.ece. 
  21. Venkatraman, Hemamalini; Sivakuma, Nandini (2009-01-15), "Growing expat community favour cluster accomodation [sic]", The Times of India, பார்க்கப்பட்ட நாள் 2009-04-29
  22. Sanghi, Seema (2009-02-14), "Meet Chennai's Kim Madam: Korean Kim Myoungsuk has successfully made the transition from Ansan to the Tamil Nadu capital", தி இந்து, archived from the original on 2009-02-20, பார்க்கப்பட்ட நாள் 2009-04-29
  23. 23.0 23.1 Ghiridharadas, Anand (2006-09-12), "Foreign Automakers See India as Exporter", The New York Times, பார்க்கப்பட்ட நாள் 2009-04-29
  24. 24.0 24.1 24.2 Kannan, Swetha (24 July 2013). "Seoul searching in Chennai". Business Line (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.com/news/seoul-searching-in-chennai/article4948668.ece. 
  25. Doctor, Vikram (2008-06-08), "Food & flavour beyond Kimchi", The Times of India, பார்க்கப்பட்ட நாள் 2009-04-29