சிறுநீரகத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநீரகத்தி
சிறுநீரகத்தின் அடிப்படை அலகான சிறுநீரகத்தியின் வரைபடம் 1. கலன்கோளம், 2. வெளியேறும் நுண்தமனி, 3. போமனினுறை, 4. அண்மைச் சுருள் நுண்குழல், 5. மேற்பட்டைச் சேகரிக்கும் கான், 6. சேய்மைச் சுருள் நுண்குழல், 7. ஹென்லேயின் வளைவு, 8. பெலினியின் கான், 9. குழல்வெளி மயிர்க்குழாய்கள், 10. Arcuate vein, 11. Arcuate artery, 12. உட்செல்லும் நுண்தமனி, 13. கலன்கோள உபகரணம்.
இலத்தீன் nephroneum
கிரேயின்

subject #253 1221

முன்னோடி Metanephric blastema (intermediate mesoderm)
ம.பா.தலைப்பு Nephrons

சிறுநீரகத்தி (Nephron) எனப்படுவது சிறுநீரகத்தின் அமைப்பிற்குரியதும், தொழிலுக்குரியதுமான அடிப்படை அலகாகும். இந்த சிறுநீரகத்தியே, குருதியை வடிகட்டுவதன் மூலமும், பின்னர் தேவையான பொருட்களை மீள உறிஞ்சி, தேவையற்றவற்றை கழிவாக அகற்றுவதன் மூலமும், உடலிலுள்ள நீரினதும், சோடியம் போன்ற கரையும் பதார்த்தங்களினதும் சமநிலையைப் பேணும் முக்கியமான தொழிலைச் செய்கின்றது. இந்த சிறுநீரகத்தியின் தொழில் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருப்பதுடன், அகச்சுரப்பித் தொகுதியினால் கட்டுப்படுத்தப்படுவதுமாக இருக்கின்றது[1]. சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர் (Antidiuretic hormone), அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல்) வளரூக்கி ஆல்டோஸ்டிரோன் (aldosterone), இணைகேடய வளரூக்கி போன்றவைகளினால் கட்டுப்படுத்தப்படும் தொழிற்பாடு உடைய சிறுநீரகத்திகள் கழிவுகளை வடித்து வெளியேற்றுவதன் மூலம் உடலிலுள்ள நீரின் அளவு, சோடியம் போன்ற அயனிகளின் அளவு, வளர்சிதைமாற்ற இடைநிலைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் சமநிலையைப் பேணுகின்றது. இதன் மூலம் குருதியின் அளவு, குருதி அழுத்தம், குருதியின் காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) என்பவற்றை ஒழுங்கமைக்கின்றது.


மனிதரில் ஒரு சாதாரண சிறுநீரகத்தில், 800,000 தொடக்கம் 1.5 மில்லியன்கள் வரையிலான சிறுநீரகத்திகள் உள்ளன[2].

உடற்கூற்றியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Maton, Anthea; Jean Hopkins, Charles William McLaughlin, Susan Johnson, Maryanna Quon Warner, David LaHart, Jill D. Wright (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-981176-1. https://archive.org/details/humanbiologyheal00scho. 
  2. Guyton, Arthur C.; Hall, John E. (2006). Textbook of Medical Physiology. Philadelphia: Elsevier Saunders. பக். 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-0240-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீரகத்தி&oldid=3812450" இலிருந்து மீள்விக்கப்பட்டது