சின் பெங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சின் பெங், (சீனம்:陈平) (பிறப்பு:1924) என்பவர் மலேசியா, பேராக், சித்தியவான் எனும் நகரில் பிறந்தவர். இவருடைய முழுப்பெயர் ஓங் பூன் ஹுவா Ong Boon Hua. (சீனம்:王文華). மலாயாவில் ஜப்பானியர்கள் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராகவும், பிரித்தானியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டவர். அவருடைய சேவைகளைப் பாராட்டி அவருக்கு பிரித்தானிய அரசாங்கம் Order of the British Empire எனும் விருதை வழங்கிக் கௌரவம் செய்தது.

இருப்பினும், அவர் பின்னாட்களில் பிரித்தானியர்களுக்கு எதிராகவே மலாயா நாட்டைக் கைப்பற்ற முனைந்தார். பின்னர், இவர் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியை உருவாக்கி அதன் தலைவர் ஆனார். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டார். மலாயா அவசரகாலத்தின் போது பல கொரில்லா கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு பல இன்னலகளைக் கொடுத்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சின்_பெங்&oldid=1366950" இருந்து மீள்விக்கப்பட்டது