சித்தூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம்
Chittoor Urban Development Authority
துறை மேலோட்டம்
அமைப்பு12 பிப்ரவரி 2019
வகைநகர்ப்புற திட்டமிடம் முகமை
ஆட்சி எல்லைஆந்திரப் பிரதேச அரசு
தலைமையகம்சித்தூர், ஆந்திரப் பிரதேசம்


சித்தூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (Chittoor Urban Development Authority) இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒரு நகர்ப்புற திட்டமிடல் நிறுவனமான இது 12 பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச பெருநகரப் பகுதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்கள் சட்டம், 2016 இன் கீழ் சித்தூரில் தலைமையகத்துடன் உருவாக்கப்பட்டது. [1][2]

அதிகார வரம்பு[தொகு]

சித்தூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் அதிகார வரம்பு 3,501.14 சதுர கிலோமீட்டர் (1,351.80 சதுர மைல்) பரப்பளவு கொண்டதாகும். இப்பரப்பளவின் மக்கள் தொகை 1,205,683 என்று கணக்கிடப்பட்டுள்ளது. சித்தூரின் 22 மண்டலங்களில் உள்ள 434 கிராமங்கள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளடங்கியுள்ளன.[1][3] கீழே உள்ள அட்டவணை சித்தூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளை பட்டியலிடுகிறது.

அதிகார வரம்பு
குடியிருப்பு வகை பெயர் மொத்தம்
நகராட்சி ஆணையம் சித்தூர் நகராட்சி ஆணையம் 1

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Constitution of Chittoor Urban Development Authority" (PDF). Director of Town and Country Planning. Municipal Administration and Urban Development, Andhra Pradesh. 12 February 2019. பார்க்கப்பட்ட நாள் 12 June 2019.
  2. "Four new UDAs constituted". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.
  3. Object, object (2019-02-13). "Chittoor Urban Development Authority notification released". www.thehansindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.