சலோங்கா தேசியப் பூங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சலோங்கா தேசியப் பூங்கா* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | |
| வகை | இயற்கை |
| ஒப்பளவு | vii, x |
| மேற்கோள் | 280 |
| பகுதி† | ஆபிரிக்கா |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1984 (8ஆவது அமர்வு) |
| ஆபத்தில் உள்ளவை | 1999- |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
சலோங்கா தேசியப் பூங்கா, கொங்கோ ஜனநாயகக் குடியரசில், கொங்கோ ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். இது ஆபிரிக்காவின் மிகப் பெரிய வெப்பவலய மழைக்காடு ஆகும். இங்கே பொனோபோஸ், சலோங்கா, குரங்குகள், ஸயர் மயில்கள், காட்டு யானைகள், ஆபிரிக்க முதலைகள் என்பன காணப்படுகின்றன. இது 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பதியப்பட்டுள்ளது. கொங்கோவின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து 1999 இல் இது ஆபத்துக்கு உட்பட்டுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.