சரவாக் மலாய் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவாக் மலாய் மொழி
Sarawak Malay
Kelakar Sarawak
நாடு(கள்) மலேசியா
 புரூணை
பிராந்தியம் சரவாக்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
900,000–1,200,000  (2023)
ஆஸ்திரோனீசிய மொழிகள்
பேச்சு வழக்கு
சரிபாசு
மொழிக் குறியீடுகள்
ISO 639-2may (B)
ISO 639-3msa (T)
மொழிசார் பட்டியல்
zlm-sar
மொழிக் குறிப்புNone

சரவாக் மலாய் மொழி (மலாய்: Bahasa Melayu Sarawak அல்லது Bahasa Sarawak,; ஆங்கிலம்: Sarawak Malay Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மலாய் மொழியைப் பூர்வீகமாகக் கொண்டவர்களின் மொழியாகும்.

சரவாக் மலாய்க்காரர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மொழியாவும் விளங்குகிறது. அத்துடன் சில சூழ்நிலைகளில் சரவாக்கின் பூர்வீக மக்களுக்குள்; குறிப்பாக மலாய் (Malay People) மற்றும் மெலனாவு மக்களுக்கு (Melanau People) இடையே ஒரு வழக்கு மொழியாகவும் (Lingua Franca) செயல்படுகிறது.[1]

பொது[தொகு]

சரவாக் மாநிலத்தின் இலிம்பாங் மாவட்டம் (Limbang District) மற்றும் இலாவாசு மாவட்டம் (Lawas District) ஆகிய மாவட்டங்களில் அதிகமாய்ப் பேசப்படும், இந்த சரவாக் மலாய் மொழி, புரூணை மலாய் மொழியுடன் (Bruneian Malay) தொடர்பு உடையது.[2]

மேலும் இந்த மொழி இந்தோனேசியா மாநிலத்தின் மேற்கு கலிமந்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பேசப்படும் சங்காவு மலாய் (Sanggau Malay), சிந்தாங் மலாய் (Sintang Malay) மற்றும் செகாடாவு மலாய் (Sekadau Malay) ஆகியவற்றுடன் வலுவான ஒற்றுமையைக் கொண்டுள்ளது.

பேச்சு வழக்குகள்[தொகு]

சுமத்திரா (Sumatra) மற்றும் மலாயா தீபகற்பத்தின் (Malayan Peninsula) மலாய் பேச்சு வழக்குகளுடன் ஒப்பிடும் போது, இந்த மொழி இபானிய மொழிகளுடன் (Ibanic Languages) மிகவும் பொருந்திப் போகிறது. அதே வேளையில் சரவாக்கிற்கு வெளியே உள்ள சாதாரண மலாய் மொழியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது.[3]

சரவாக் மலாய் மொழி மூன்று கிளைமொழிகளாகப் பிரிக்கப் படலாம்:[4]

  • கூச்சிங் மலாய் மொழி (Kuching Malay)
  • சரிபாசு மலாய் மொழி (Saribas Malay)
  • சிபு மலாய் மொழி (Sibu Malay)

மேற்கோள்[தொகு]

  1. Nabilah Bolhasan (2019). "Dialek Melayu Sarawak dan Bahasa Melayu Baku:Satu Kajian Perbandingan". Malaysian Journal of Social Science 4: 14-18. https://kuim.edu.my/journal/index.php/JSS/article/view/475/402. 
  2. "Sarawak, a land of many tongues". theborneopost.com. Borneo Post. 23 December 2010. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  3. Daftar kata dialek Melayu Sarawak : dialek Melayu Sarawak-bahasa Malaysia, bahasa Malaysia-dialek Melayu (2 ). Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka. 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9836263241. 
  4. Nabilah Bolhassan (2019). "Dialek Melayu Sarawak dan Bahasa Melayui Baku:Satu Kajian Perbandingan" (in ms). Malaysian Journal of Social Science 4: 12-14. https://kuim.edu.my/journal/index.php/JSS/article/view/475/402. 

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்_மலாய்_மொழி&oldid=3653915" இலிருந்து மீள்விக்கப்பட்டது