சனநாயகக் கட்சி (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சனநாயகக் கட்சி (Democratic Party, ஜனநாயகக் கட்சி) இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இக்கட்சி 2013 மார்ச் மாதத்தில் இலங்கைத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.[2]

மாகாண சபைத் தேர்தல், 2013[தொகு]

சனநாயகக் கட்சி முதற் தடவையாக 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வடக்கு, வடமேற்கு, மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. இவற்றில் வடமேற்கு மாகாணத்தில் 46,114 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், மத்திய மாகாணத்தில் 45,239 வாக்குகளைப் பெற்று 2 இடங்களையும் கைப்பற்றியது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 170 வாக்குகளை மட்டுமே பெற்றது. எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka's former army chief registers a new political party". colombopage (12 மார்ச் 2013). பார்த்த நாள் 2013-05-22.
  2. "Fonseka’s party wins recognition". தி இந்து (1 ஏப்ரல் 2013). பார்த்த நாள் 2013-05-22.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சனநாயகக்_கட்சி_(இலங்கை)&oldid=1502719" இருந்து மீள்விக்கப்பட்டது