இடது விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடது விடுதலை முன்னணி
Left Liberation Front
தலைவர்விக்கிரமபாகு கருணாரத்தின
செயலாளர்லீனஸ் ஜயதிலக்க
தொடக்கம்1998
முன்னர்புதிய இடது முன்னணி
தலைமையகம்17 பராக்ஸ் ஒழுங்கை, கொழும்பு 02
கொள்கைபொதுவுடைமை, துரொக்சியியம்
தேர்தல் சின்னம்
குடை
இணையதளம்
nssp.info
இலங்கை அரசியல்

இடது விடுதலை முன்னணி (Left Liberation Front) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி 1998 ஆம் ஆண்டில் புதிய இடது முன்னணி (New Left Front) என்ற பெயரில் நவ சமசமாசக் கட்சி, மற்றும் மக்கள் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் இணைந்து உருவாக்கப்பட்டது. இக்கூட்டணியின் தற்போதைய உறுப்புக் கட்சிகள்:

ஆகியவையாகும்.

2005 அரசுத் தலைவர் தேர்தலில், புதிய இடது முன்னணியின் வேட்பாளராக சாமில் ஜயநெத்தி என்பவர் போட்டியிட்டு 9,296 வாக்குகள் பெற்று ஆறாவதாக வந்தார்.

இக்கூட்டணி "இடது முன்னணி" என்றும், பின்னர் 2010 ஆம் ஆண்டில் "இடது விடுதலை முன்னணி" என்றும் இரு தடவைகள் தனது பெயரை மாற்றிக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடது_விடுதலை_முன்னணி&oldid=2211979" இலிருந்து மீள்விக்கப்பட்டது