சக்மா மொழி
| சக்மா | ||
|---|---|---|
| நாடுகள்: | வங்காளதேசம், இந்தியா | |
| பகுதி: | தென்கிழக்கு சிட்டாகாங் மலைப் பகுதிகள், சிட்டகாங் நகரம், இந்தியாவின் மிசோரம், திரிபுரா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள். | |
| பேசுபவர்கள்: | 612,000 | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்தோ-ஐரோப்பியம் இந்தோ-ஈரானியம் இந்தோ-ஆரியம் வங்காள-அசாமியம் சக்மா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | ccp | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சக்மா மொழி ஒரு இந்தோ ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் வங்காளதேசத்திலும், ஏனையோர் இந்தியாவிலும், சிலர் மியன்மாரிலும் வாழ்கின்றனர். வங்காளதேசத்தில் இம்மொழி பேசுவோர் சுமார் 312,000 வரை இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்தியாவில், முக்கியமாக மிசோரம், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 80,000, 50,000, 100,000 ஆகிய எண்ணிக்கயில் காணப்படுகின்றனர். மியன்மாரிலும் இவர்கள் 20,000 வரை உள்ளனர். அண்மைக் காலங்களில் இம் மொழி பேசுவோர் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.
இம் மொழி தொடக்கத்தில் திபெத்தோ-பர்மிய மொழிக்குடும்பத்துக்கு நெருங்கியதாக இருந்ததாகவும், பின்னர், அருகில் உள்ள, வங்காள மொழிக்கு நெருங்கிய, கிழக்கு இந்தோ-ஆரிய மொழியான சிட்டகோனிய மொழியின் தாக்கத்தினால் பெருமளவு மாற்றமடைந்ததாகத் தெரிகிறது. இதனால் இது தற்கால மொழியியலாளர்களால், இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்துட் சேர்க்கப்பட்டுள்ளது.