சகோத்ரபாய் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகோத்ரபாய் ராய்
Sahodrabai Rai
இரண்டாவது மக்களவை உறுப்பினர்
பதவியில்
1957–1962
முன்னையவர்சோடியா குப்சந்த் தர்யாவ் சிங்
பின்னவர்ஜவாலா பிரசாத் ஜோதிஷி
தொகுதிசாகர்
ஐந்தாவது மக்களவை உறுப்பினர்
பதவியில்
1971–1977
முன்னையவர்ராம்சிங் அயர்வால்
பின்னவர்நர்மதா பிரசாத் ராய்
தொகுதிசாகர்
ஏழாவது மக்களவை உறுப்பினர்
பதவியில்
1980–1981
முன்னையவர்நர்மதா பிரசாத் ராய்
பின்னவர்நந்தலால் சௌத்ரி
தொகுதிசாகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-04-30)30 ஏப்ரல் 1919
பொற்றாய் கிராமம், பதரியா, தமோ மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு26 மார்ச்சு 1981(1981-03-26) (அகவை 61)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • நிரேன் சிங் (father)
வேலைஅரசியல்வாதி

சகோத்ரபாய் தேவி ராய் (Sahodrabai Rai)(30 ஏப்ரல் 1919 - 26 மார்ச் 1981) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

சாகர் மக்களவைத் தொகுதியிலிருந்து சகோத்ரபாய் தேவி ராய் 1957ஆம் ஆண்டு இந்தியாவின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். ராய் இந்தியாவின் 1971 மற்றும் 1980 பொதுத் தேர்தல்களிலும், சாகர் மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் 2வது, 5வது மற்றும் 7வது மக்களவையில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தாமோவிலிருந்து 3வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[1]

ராய் நவகாளியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பணியாற்றினார். 1945-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற சத்தியாகிரகத்தில் ("உண்மையை வலியுறுத்துதல்" என்று தளர்வாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) பங்கேற்றார். இவரும் 1979-ல் இந்திரா காந்தியுடன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.[2][3]

இறப்பு[தொகு]

சகோத்ரபாய் தேவி ராய் மார்ச் 1981-ல் தனது 61 வயதில் இறந்தார்.[4][5]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "7th Lok Sabha - Members Bioprofile - RAI, SHRIMATI SAHODRABAI". பார்க்கப்பட்ட நாள் 29 April 2015.
  2. "Sahodrabai Rai vs. Ram Sigh Aharwar". the-laws.com. பார்க்கப்பட்ட நாள் 29 April 2015.
  3. "Members : Lok Sabha". 101.27. Archived from the original on 29 April 2015. பார்க்கப்பட்ட நாள் 29 April 2015.
  4. Story of Goa Virangana Sahodra Bai
  5. Parliamentary Committee: Summary of Work, Vol. 7 (1981), pg. 7
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோத்ரபாய்_ராய்&oldid=3686517" இலிருந்து மீள்விக்கப்பட்டது