கோத்தா

ஆள்கூறுகள்: 2°31′N 102°9′E / 2.517°N 102.150°E / 2.517; 102.150
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா
Kota
நெகிரி செம்பிலான்
Map
ஆள்கூறுகள்: 2°31′N 102°9′E / 2.517°N 102.150°E / 2.517; 102.150
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம் ரெம்பாவ்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு71350
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 06400 000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

கோத்தா (மலாய்; ஆங்கிலம்: Kota; சீனம்: 科塔) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.

மலேசிய கூட்டரசு சாலை 1 (Malaysia Federal Route 1) வழியில் இந்த சிறுநகரம் அமைந்துள்ளது. இந்த சிறிய நகரத்தில் கம்போங் லெகோங் உலு, கம்போங் காடோங், கம்போங் ஸ்ரீ கென்டாங், கம்போங் சாவா ராஜா; மற்றும் மேலும் சில கிராமங்கள் உள்ளன.

பொது[தொகு]

1960-களில் இங்கு ஒரு தொடருந்து நிலையம் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் கம்யூனிஸ்டு ஆதரவாளர்களால் அங்கு நடந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலின் போது அந்தத் தொடருந்து நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது. அந்த நிகழ்விற்கு ’13 நாள் பயங்கரவாதம்’ (13 Days of Terror) என்று பெயர். பழைய தொடருந்து நிலையம் இருந்த இடத்தில் தற்போது புதிதாக ஒரு தொடருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kota, Negeri Sembilan - There was a train station in the 1960s but the train station was destroyed by a group of communists during the time of "darurat 13 hari" (the 13 days of terror)". Academic Dictionaries and Encyclopedias (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா&oldid=3879739" இலிருந்து மீள்விக்கப்பட்டது