அம்பாங்கான்

ஆள்கூறுகள்: 2°45′0″N 101°52′0″E / 2.75000°N 101.86667°E / 2.75000; 101.86667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாங்கான்
Ampangan
நெகிரி செம்பிலான்
அம்பாங்கான் is located in மலேசியா
அம்பாங்கான்
அம்பாங்கான்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°45′0″N 101°52′0″E / 2.75000°N 101.86667°E / 2.75000; 101.86667
நாடு Malaysia
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்

அம்பாங்கான் (ஆங்கிலம்: Ampangan; மலாய் மொழி: Ampangan அல்லது Mukim Ampangan) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில், சிரம்பான் மாநகருக்கு மிக அருகாமையில் அமைந்து உள்ள ஒரு நகரம்.

இந்த நகரம் சிரம்பான் நகருக்கு மிக அண்மையில் அமைந்து இருப்பதால் நாகரிகத்தின் வளர்ச்சித் தாக்கங்களை இந்த அம்பாங்கான் நகரிலும் காண முடிகின்றது. அந்த வகையில் அம்பாங்கான் நகரைத் தனி நகரமாக பார்க்க இயலாது. சிரம்பான் நகரின் துணை நகரம் என்று சொல்லும் அளவிற்கு நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது.

பொது[தொகு]

அம்பாங்கான் என்பது ஒரு மலாய்ச் சொல். "எம்பாங்கன்" மலாய் மொழி: Empangan) என்பதில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எம்பாங் (Empang) என்பது ஒரு மலாய்ச் சொல். அணை என்று பொருள்.

போக்குவரத்து[தொகு]

Jalan Jelebu Jkr-ft86.png

அம்பாங்கான் நகரத்தின் வடக்கு முனையில் செலுபு சாலை 86; தெற்கு முனையில் சிரம்பான் - கோலா பிலா சாலை 51 ஆகிய சாலைகள், இந்த நகரத்திற்குச் சேவை செய்யும் முக்கியச் சாலைகளாக விளங்குகின்றன.

லெக்காஸ் நெடுஞ்சாலை (LEKAS) (EXIT 2106) அம்பாங்கானில் இருந்து வெளியேறுவதற்கான முதன்மைச் சாலையாக விளங்குகிறது.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாங்கான்&oldid=3448357" இலிருந்து மீள்விக்கப்பட்டது