கிடங்கு தெரு

ஆள்கூறுகள்: 5°25′6.34″N 100°20′41.9″E / 5.4184278°N 100.344972°E / 5.4184278; 100.344972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிடங்கு தெரு
Weld Quay
பராமரிப்பு :பினாங்கு தீவு மாநகராட்சி
அமைவிடம்:பினாங்கு
ஜார்ஜ் டவுன்
வடக்கு முனை:கிங் எட்வர்ட் இடம்
தெற்கு முனை:துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை
Construction
துவக்க நாள்:1880

வெல்டு குவே அல்லது கிடங்கு தெரு (ஆங்கிலம்: Weld Quay; மலாய்: Pengkalan Weld சீனம்; 海墘) என்பது மலேசியா, பினாங்கு ஜார்ஜ் டவுன் நகரின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை சாலையாகும்.

நியூசிலாந்தின் பிரதம மந்திரியின் (Prime Minister of New Zealand) பெயரால் பெயரிடப்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒரு சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தச் சாலை துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை (Tun Dr. Lim Chong Eu Expressway), லைட் சாலை (Light Street) மற்றும் நகரின் மையத்தில் உள்ள கடற்கரை தெருவுடன் (Beach Street) இணைக்கிறது.

பொது[தொகு]

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜார்ஜ் டவுனில் ஒரு பெரிய நில மீட்பு திட்டத்தின் (Land Reclamation Project) ஒரு பகுதியாக கிடங்கு தெரு உருவாக்கப்பட்டது. அந்த நில மீட்பு திட்டத்தினால் கடற்கரையை மேலும் கிழக்கு நோக்கி தள்ளப்பட்டது.

இப்போது நகரின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் (UNESCO World Heritage Site) ஒரு பகுதியாக, சுவெட்டன்காம் பையர் (Swettenham Pier) மற்றும் ராஜா துன் ஊடா பெர்ரி முனையம் (Raja Tun Uda Ferry Terminal) போன்ற முக்கிய போக்குவரத்து மையங்கள் இன்றும் கிடங்கு தெருவில் அமைந்துள்ளன[1][2][3] .

சொற்பிறப்பியல்[தொகு]

தமிழில், இந்த இடம் கிடங்கு தெரு (Kitangu Street) என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய காலத்தில் இது முக்கிய துறைமுகமாக இருந்ததால், இந்த இடத்தில் நிறைய கிடங்குகள் அமைந்து இருந்தன.

1864-இல் நியூசிலாந்தின் பிரதமராக பொறுப்பு வகித்த பிரடெரிக் வெல்ட் (Frederick Weld) என்பவரின் நினைவாக வெல்ட் குவே (Weld Quay) எனப் பெயரிடப்பட்டது.

நினைவிடங்கள்[தொகு]

  • சுவெட்டன்காம் பையர் (Swettenham Pier)
  • ராஜா துன் ஊடா பெரி முனையம் (Raja Tun Uda Ferry Terminal)
  • கூட்டமைப்பு மலாய் மாநில இரயில்வே கட்டிடம் (Federated Malay States Railways Building)

சான்றுகள்[தொகு]

  1. Khoo, Salma Nasution (2007). Streets of George Town, Penang. Penang, Malaysia: Areca Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789839886009. https://archive.org/details/streetsofgeorget00khoo. 
  2. "The Changing Harbour Front" (in en-US). Penang Monthly. 2016-07-01 இம் மூலத்தில் இருந்து 2017-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170220012243/http://penangmonthly.com/the-changing-harbour-front/. 
  3. "Ferry Services". Port of Penang. Archived from the original on 2018-04-21. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடங்கு_தெரு&oldid=3666894" இலிருந்து மீள்விக்கப்பட்டது