கோட்டத்தாவளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டத்தாவளம் (Kottathavalam) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில் முருகன் மலையில் அமைந்துள்ள ஒரு இயற்கையான குகை ஆகும்.

கேரளத்தின் குரிசுமலை முருகன் கோயிலுக்கு அருகே உள்ள படிகட்டுகளில் ஏறினால் இந்த பிரம்மாண்ட குகைய அடைய முடியும். செவிவழிச் செய்திகளின்படி மதுரையை ஆண்ட அரச குடும்பம் பூன்ஞார் போகும் வழியில் இந்த குகையில் தங்கினார்களாம். இதற்கு சான்றாக இந்த குகையில் உள்ள பாறைகளில் நாற்காலிகள், தேர்கள் போல செதுக்கபட்டுள்ளன. மேலும் மதுரை மீனாட்சி, ஐயப்பன், முருகன், கண்ணகி ஆகியோரின் சிலைகள் போன்றவையும் உள்ளன.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டத்தாவளம்&oldid=3019791" இலிருந்து மீள்விக்கப்பட்டது