கொன்பியூசனியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொன்பியூசனியம் என்பது, சீன மெய்யியலாளரான கன்பியூசியஸ் என்பவருடைய போதனைகளில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட நன்னெறி, மெய்யியல் என்பன சார்ந்த ஒரு வாழ்க்கை முறையாகும். இது மனிதனின் ஒழுக்கம், சரியான செயல்கள் என்பவற்றில் கவனம் செலுத்துகின்றது. கன்பியூசியனியம், கிழக்காசியப் பண்பாட்டிலும், வரலாற்றிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய, ஒழுக்கம், சமூகம், அரசியல், மற்றும் மெய்யியல் சிந்தனைகளைக் கொண்ட ஒரு முறைமையாகும்.
கன்பியூசியனியத்தின் தாக்கங்களுக்கு உள்ளான நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா, தாய்வான், சிங்கப்பூர், வியட்நாம் ஆகியன அடங்கும். இவற்றுடன், சீனமக்கள் பெருமளவில் குடியேறிய பிற இடங்கள் பலவற்றிலும் கூட கன்பியூசியனியத்தின் செல்வாக்கு உண்டு.