கைபோமித்ரா ஏட்ரிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைபோமித்ரா ஏட்ரிமா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
திப்டிரா
குடும்பம்:
தபானிடே
பேரினம்:
கைபோமித்ரா
இனம்:
கை. ஏட்ரிமா
இருசொற் பெயரீடு
கைபோமித்ரா ஏட்ரிமா
மெய்ஜென், 1820
வேறு பெயர்கள் [1]
பட்டியல்
  • தபானசு ஹேடெனியானசு ஜான்னிகே, 1866
  • தெரியோப்லெக்டேசு ஜாக்கோபி பெளலியர், 1945

கைபோமித்ரா ஏட்ரிமா (Hybomitra aterrima) எனப்படும் குதிரை ஈக்கள் வகைகளுள் ஒன்றாகும். இவை டேபேனிடே எனப்படும் மாட்டு ஈ குடும்பத்தினைச் சார்ந்தவை.[2][3]

பரவல்[தொகு]

இந்த சிற்றினம் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் (ஆஸ்திரியா, பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, பிரான்சு, ஜெர்மனி, கிரேக்கம், இத்தாலி, வடக்கு மக்கேதோனியா, உருமேனியா, எசுப்பானியா மற்றும் சுவிட்சர்லாந்து) காணப்படுகிறது.[4]

விளக்கம்[தொகு]

கைபோமித்ரா ஏட்ரிமா. முதுகுப்புறத் தோற்றம்

கைபோமித்ரா ஏட்ரிமா 13–16 மில்லிமீட்டர்கள் (0.51–0.63 அங்) நீளம் வரை வளரக்கூடியன.[5]

உடல் கருப்பு நிறத்திலும் இறக்கைகள் ஒளி ஊடுருவும் வகையிலும், ஆர்4 இரத்த நாள் அடிப்பகுதியில் ஒரு சிறிய கருப்பு புள்ளி காணப்படும்.[5][6]

முகம் கருப்பு நிறத்தில் முடிகளுடன் உள்ளது. நீள் உணர்கொம்புடன் காணப்படும். உணர்நீட்சி கருப்பு முடிகளுடன் கருப்பு நிறத்தில் இருக்கும். கூட்டுக் கண்கள் இரு பாலினத்திலும் நன்கு வளர்ந்தவை. இவை மூன்று நீல-சிவப்பு நிற குறுக்குவெட்டு பட்டைகள் கொண்ட ஒரு மாறுபட்ட வெளிர் பச்சை நிறமியைக் கொண்டுள்ளன.[5][6]

கைபோமித்ரா ஏட்ரிமா வர். ஆரிபிலா (மீஜென்) அடிவயிற்றுத் தட்டுகளுடன் பின்புற விளிம்புகளில் தங்க-மஞ்சள் நிறத்துடன் இளம்பருவத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொண்டுள்ளது.[6]

கூட்டுக்கண்கள்

உயிரியல்[தொகு]

இந்த குதிரை ஈக்களில் ஆண் ஈக்கள் தாவர சாறுகளை உண்கின்றன. அதே சமயம் பெண் ஈக்கள்[5] பாலூட்டிகளின் இரத்தத்தை உண்கின்றன. ஏனெனில் இவை இனப்பெருக்கம் செய்வதற்கு இரத்த உணவு தேவைப்படுகிறது. இவை கால்நடைகளுக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாக இருக்கலாம், ஆனால் பொதுவாக அவை மனிதர்களைக் கடிக்காது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Catalogue of life
  2. Biolib
  3. Chvala, M., Lyneborg, L. & Moucha, J. (1972). The Horse Flies of Europe
  4. Fauna europaea
  5. 5.0 5.1 5.2 5.3 Insektenbox
  6. 6.0 6.1 6.2 S. Krcmar et al.: Key to the horse flies fauna of Croatia (Diptera, Tabanidae)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைபோமித்ரா_ஏட்ரிமா&oldid=3170492" இலிருந்து மீள்விக்கப்பட்டது