கேலோப்டிலியா ரெசிடேட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேலோப்டிலியா ரெசிடேட்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
கணுக்காலி
வகுப்பு:
பூச்சி
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கிரேசிலேரிடே
பேரினம்:
கேலோப்டிலியா
இனம்:
கே. ரெசிடேட்டா
இருசொற் பெயரீடு
கேலோப்டிலியா ரெசிடேட்டா
மெரிக், 1918
வேறு பெயர்கள்

கிரேசிலேரியா ரெசிடேட்டா மெரிக், 1918

கேலோப்டிலியா ரெசிடேட்டா (Caloptilia recitata) என்பது கிரேசிலேரிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி சிற்றினமாகும். இது சீனா (சிச்சுவான், ஜியாங்சி, புஜியான், ஹுனான், குய்ஷோ), ஆங்காங், இந்தியா (மேகாலயா, அசாம்), ஜப்பான் (ஒன்சூ, இரியூக்கியூ தீவுகள், ஷிகோகு, கியாஷோ) மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது.[1]

இதன் இறக்கை விட்டம் 10-13 மிமீ ஆகும். இவற்றில் இரண்டு வடிவங்கள் உள்ளன. கோடை உறக்கம் மேற்கொள்பவை மற்றும் இலையுதிர் வடிவம். இவை இரண்டும் வண்ண அடிப்படையில் வேறுபடுகின்றன. கோடை உறக்கம் மேற்கொள்ளும் அந்துப்பூச்சி ஓச்சர்-பழுப்பு நிற நன்கு வேறுபடக்கூடிய மஞ்சள் நிற கோஸ்டல் புள்ளிகளுடன் காணப்படும். இலையுதிர்கால பூச்சி தனித்துவமான இருண்ட நிறத்தில் உள்ளது.

கோட்டினஸ் கோகிக்ரியா, ருஸ் ஜவானிக்கா, டாக்ஸிகோடென்ட்ரான் சில்வெஸ்ட்ரே மற்றும் டாக்ஸிகோடென்ட்ரான் ட்ரைகோகார்பம் ஆகிய தாவரங்களை இதன் இளம் உயிரிகள் உணவாக உட்கொள்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]