கேரள அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 10°02′17″N 76°18′52″E / 10.03814°N 76.31434°E / 10.03814; 76.31434
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள அருங்காட்சியகம்
Map
முன்னாள் பெயர்
Museum of Kerala History
நிறுவப்பட்டது1984
அமைவிடம்இந்தியா, கேரளம், கொச்சி
ஆள்கூற்று10°02′17″N 76°18′52″E / 10.03814°N 76.31434°E / 10.03814; 76.31434
வகைஓவியக் காட்சியகம், வரலாற்று அருங்காட்சியகம்
பொது போக்குவரத்து அணுகல்பத்தடிப்பாலம் மெட்ரோ நிலையம்
வலைத்தளம்http://www.keralamuseum.com

கேரள அருங்காட்சியகம் (Kerala Museum, கேரள வரலாற்று அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் கொச்சியின், இடப்பள்ளியில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது கொச்சியில் உள்ள பழமையான கலை மற்றும் வரலாற்று அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இந்த அருங்காட்சியகத்தை 1984 ஆம் ஆண்டில் கொடையாளர் மற்றும் தொழில்முனைவோரான ஆர். மாதவன் நாயர் (1914-1996) நிறுவினார். இந்த அருங்காட்சியகத்தை மாதவன் நாயர் அறக்கட்டளை நிர்வகிக்கிறது.

கேரள அருங்காட்சியகத்தில் மூன்று காட்சியகங்கள் உள்ளன அவை: கேரள வரலாற்று அருங்காட்சியகம், பொம்மைகள் அருங்காட்சியகம் நவீன கலைக்கூடம் ஆகியவை ஆகும்.

கேரள வரலாற்று அருங்காட்சியகம்[தொகு]

கேரள வரலாற்று அருங்காட்சியகம்

கேரள வரலாற்று அருங்காட்சியகமானது கேரள அருங்காட்சியகத்தில் உள்ள மிகப் பழமையான காட்சியகம் ஆகும். கேரள மாநிலத்தின் வரலாற்றை 36 ஓவியக் காட்சிப்படங்கள் மூலம் பிராந்தியங்களின் முக்கிய வரலாற்று அத்தியாயங்கள் மற்றும் ஆளுமைகள் குறித்து விவரிக்கிறது. காட்சியகத்துக்கு வருகை தரும் அனைவரும் காண ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் வர்ணனைகள் உள்ளன. காட்சியகத்தில் கவனம் பெற்ற முக்கிய வரலாற்று நபர்களான, பொதியமலையின் ஆய் ஆண்டிரன், செங்குட்டுவன், இளங்கோ வேண்மான், புனித தோமா, ஆரிய குடியேற்றம், [[ஏழில் நெடுவரை |ஏழில்மலையின் நன்னன்]], குலசேகர ஆழ்வார், சேரமான் பெருமாள் நயனார், சங்கராச்சாரியார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் . [1] திருவனந்தபுரத்தின் சிற்பி கரமண ராஜகோபால் இந்த காட்சியகத்தில் சிற்பங்களையும் ஓவியங்களையும் உருவாக்கியுள்ளார், மேலும் கேரளத்தின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஏ. சிறீதர மேனன் இதன் உள்ளடக்கம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

காட்சியகத்துக்கு வெளியே கேரள நிலத்தை கடலில் இருந்து கொண்டு வந்ததாக தொன்மத்தில் கூறப்படும் முனிவர் பரசுராமரின் சிலை உள்ளது.

நவீன கலைக்கூடம்[தொகு]

நவீன கலைக்கூடம்

நவீன கலைக்கூடத்தில் இந்தியாவின் சில முன்னணி நவீன ஓவியக் கலைஞர்களான ராஜா ரவி வர்மா, எம். எஃப். உசைன், எஃப். என். சௌசா, ஜாமினி ராய், பெனோட் பெகாரி முகர்ஜி, ராம்கிங்கர் பைஜ், இராம் குமார், கே. ஜி. சுப்பிரமணியன் ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. [2] இந்த ஓவியத் தொகுப்பை மாதவன் நாயர் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு ஆண்டு காலம் செலவழித்து சேகரித்தனர். இதற்காக கலைஞர்கள், ஓவிய சேகரிப்பாளர்கள், காட்சியகங்களிலிருந்தும் படைப்புகள் வாங்கப்பட்டன. இதில் சிலவற்றை கலைஞர்கள் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினர். இந்த காட்சியகத்தை 1994 ஆம் ஆண்டில் கேரள முதல்வர் கே. கருணாகரன் முறையாகத் திறந்து வைத்தார்.

கேரள அருங்காட்சியகத்தில் உள்ள நவீன ஓவிய சேகரிப்பு பகுதியில் மட்டுமே கேரளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கும் நவீன ஓவியத் தொகுப்புகள் உள்ளன.

பொம்மை அருங்காட்சியகம்[தொகு]

பொம்மை அருங்காட்சியகத்தில் 150 பொம்மை சேகரிப்புகள் உள்ளன, இவை இந்தியாவின் கலாச்சார குழுக்களையும், நடன மரபுகளையும் சித்தரிக்கின்றன. [3]

குறிப்புகள்[தொகு]

  1. "Museum of Kerala History". பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
  2. B., Viju (5 August 2017). "Trompe-L’oeil" (in en-US). Times of India Blog. https://blogs.timesofindia.indiatimes.com/Second-Nature/trompe-loeil/. 
  3. "Museum of Kerala History at Edappally". பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_அருங்காட்சியகம்&oldid=2956555" இலிருந்து மீள்விக்கப்பட்டது