கெட்டிசுபெர்க்கு உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆபிரகாம் லிங்கன் (வட்டமிடப்பட்டுள்ளது) கெட்டிசுபெர்க்கு வந்தபோது எடுத்த ஒளிப்படங்களில் ஒன்று.[1][2][3] தமது உரை ஆற்றுவதற்கு மூன்று மணி நேரம் முன்பாக எடுத்தது. லிங்கனின் வலப்புறம் அவரது மெய்க்காவலர்

கெட்டிசுபெர்க்கு உரை (Gettysburg Address) அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனால் கெட்டிசுபெர்க்கு நகரில் நிகழ்த்தப்பெற்ற புகழ்பெற்ற உரையாகும். அமெரிக்க வரலாற்றிலேயே நிகழ்த்தப்பெற்ற சிறந்த உரைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[4] அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது கெட்டிசுபெர்க்கு சண்டையில் கூட்டமைப்பு படைகள் தோல்வியுற்று நான்கு மாதங்கள் கழித்து, நவம்பர் 19, 1863 அன்று கெட்டிசுபெர்க்கு தேசிய கல்லறைத் தோட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் இந்த உரையாற்றினார்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆபிரகாம் லிங்கன் படத்துடன் வெளியிடப்பட்ட கெட்டிசுபெர்க்கு உரையின் சுவரொட்டி

இரண்டு நிமிடங்களில் லிங்கன் மாந்த சமத்துவத்தை, குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை பிரகடனத்தை, வலியுறுத்தினார்.[5] மேலும் கூட்டமைப்பு பிரிவினை சக்திகளுக்கு எதிராக ஒன்றியத்தைக் காப்பாற்றவே உள்நாட்டுப்போர் ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார்.[6] இந்த சிக்கலில் எட்டிய வெற்றி அனைத்து குடிமக்களுக்கும்[7] உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டும்[7]"ஒரு புதிய விடுதலைக்கு,"[8] வித்திட்டுள்ளதாக அறிவித்தார். லிங்கன் மேலும் உள்நாட்டுப் போர் அமெரிக்க ஒன்றியத்தைக் காப்பாற்ற நிகழ்ந்த போராட்டமல்லாது மாந்த சமத்துவக் கொள்கைக்கான போராட்டமாகவும் விவரித்தார்.[5]

1776 ஆம் ஆண்டின் அமெரிக்கப் புரட்சிப் போரை நினைவுக்கூறுமுகமாக — தற்போது புகழ்பெற்ற வரிகளாக விளங்கும் "Four score and seven years ago" உடன் இந்த உரைத் தொடங்குகிறது. இதில் உள்ள score என்ற ஆங்கிலச் சொல் இருபது என்பதற்கானப் பழைமையான பயன்பாடாகும். இந்த உரையில் ஐக்கிய அமெரிக்காவின் நிறுவல் கொள்கைகளை உள்நாட்டுப் போரின் சூழமைவில் ஆராய்ந்துள்ளார். கெட்டிசுபெர்க்கில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்துள்ளார். மேலும் கேட்போரிடம் அமெரிக்காவின் சார்பாளர் மக்களாட்சி தழைத்திருக்க வேண்டியதன் விழிமியங்களை வலியுறுத்தி உள்ளார். உரையின் இறுதி வரிகளான "மக்களுக்கான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களின் அரசு புவியிலிருந்து அழிந்துபடக் கூடாது" (government of the people, by the people, for the people, shall not perish from the earth) இன்று பலராலும் மேற்கோளிடப்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Ultrarare photo of Abraham Lincoln discovered". Fox News. 24 September 2013. http://www.foxnews.com/science/2013/09/24/ultra-rare-photo-abraham-lincoln-discovered/. பார்த்த நாள்: 25 September 2013. 
  2. "Will the Real Abraham Lincoln Please Stand Up?". Smithsonian magazine,. Franz Lidz. http://www.smithsonianmag.com/history-archaeology/Will-the-Real-Abraham-Lincoln-Please-Stand-Up-224911272.html. பார்த்த நாள்: 3 October 2013. 
  3. Brian, Wolly (October 2013). "Interactive: Seeking Abraham Lincoln at the Gettysburg Address". Smithsonian Magazine. பார்த்த நாள் 3 October 2013.
  4. Historian James McPherson has called it "The most eloquent expression of the new birth of freedom brought forth by reform liberalism.", in McPherson, James M. Drawn with the Sword: Reflections on the American Civil War Oxford: Oxford University Press, 1996. p. 185. Google Book Search. Retrieved on November 27, 2007.
  5. 5.0 5.1 "The Gettysburg Address". History (TV channel). பார்த்த நாள் 22 February 2013.
  6. Robert J. McNamara. "Emancipation Proclamation". www.about.com 19th Century History. பார்த்த நாள் March 7, 2012.
  7. 7.0 7.1 Fox, Christopher Graham (12 September 2008). "A analysis of Abraham Lincoln's poetic Gettysburg Address". http://foxthepoet.blogspot.de.+பார்த்த நாள் 21 August 2012.
  8. White Jr., Ronald C. The Words That Moved a Nation in: "Abraham Lincoln A Legacy of Freedom", Washington, D.C.: U.S. Department of State - Bureau of International Information Programs, p. 58.

நூற்தொகுப்பு[தொகு]

  • Barton, William E. (1950). Lincoln at Gettysburg: What He Intended to Say; What He Said; What he was Reported to have Said; What he Wished he had Said. New York: Peter Smith.
  • Busey, John W., and Martin, David G., Regimental Strengths and Losses at Gettysburg, 4th Ed., Longstreet House, 2005, ISBN 0-944413-67-6.
  • Gramm, Kent. (2001) November: Lincoln's Elegy at Gettysburg. Bloomington: Indiana University Press. ISBN 0-253-34032-2.
  • Herndon, William H. and Welk, Jesse W. (1892) Abraham Lincoln: The True Story of A Great Life (Vol II). New York: D. Appleton and Company.
  • Kunhardt, Philip B., Jr. (1983) A New Birth of Freedom: Lincoln at Gettysburg. Little Brown & Co. 263 pp. ISBN 0-316-50600-1
  • Lafantasie, Glenn. "Lincoln and the Gettysburg Awakening." Journal of the Abraham Lincoln Association 1995 16(1): 73–89. Issn: 0898-4212
  • McPherson, James M. (1988). Battle Cry of Freedom: The Civil War Era (Oxford History of the United States). Oxford: Oxford University Press. ISBN 0-19-503863-0.
  • McPherson, James M. (1996). Drawn with the Sword: Reflections on the American Civil War. Oxford: Oxford University Press. ISBN 0-19-509679-7
  • Murphy, Jim. (1992) The Long Road to Gettysburg. New York: Clarion Books. 128 pp. ISBN 0-395-55965-0
  • Prochnow, Victor Herbert. ed. (1944). Great Stories from Great Lives. Freeport: Books for Libraries Press, 1944. ISBN 0-8369-2018-X
  • Rawley, James A. (1966). Turning Points of the Civil War. University of Nebraska Press. ISBN 0-8032-8935-9.
  • Reid, Ronald F. "Newspaper Responses to the Gettysburg Addresses." Quarterly Journal of Speech 1967 53(1): 50–60. Issn: 0033-5630.
  • Sandburg, Carl. (1939) "Lincoln Speaks at Gettysburg." In: Abraham Lincoln: The War Years New York: Harcourt, Brace & Company. II, 452-457. ASIN: B000BPD8GC
  • Sauers, Richard A. (2000) "Battle of Gettysburg." In Encyclopedia of the American Civil War: A Political, Social, and Military History. Heidler, David S., and Heidler, Jeanne T., eds. W. W. Norton & Company. ISBN 0-393-04758-X.
  • Selzer, Linda. "Historicizing Lincoln: Garry Wills and the Canonization of the 'Gettysburg Address." Rhetoric Review Vol. 16, No. 1 (Autumn, 1997), pp. 120–137.
  • Simon, et al., eds. (1999) The Lincoln Forum: Abraham Lincoln, Gettysburg, and the Civil War. Mason City: Savas Publishing Company. ISBN 1-882810-37-6
  • White, Ronald C. Jr. (2005) The Eloquent President: A Portrait of Lincoln Through His Words. New York: Random House. ISBN 1-4000-6119-9
  • Wieck, Carl F. (2002) Lincoln's Quest for Equality: The Road to Gettysburg. Northern Illinois University Press. 224 pp. ISBN 0-87580-299-0
  • Wills, Garry. (1992) Lincoln at Gettysburg: The Words That Remade America. New York: Simon and Schuster. 319 pp. ISBN 0-671-76956-1
  • Wilson, Douglas L. (2006). Lincoln's Sword: The Presidency and the Power of Words. Knopf. 352 pp. ISBN 1400040396

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கெட்டிசுபெர்க்கு_உரை&oldid=1707259" இருந்து மீள்விக்கப்பட்டது