குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2007 இந்தியாவின் கொடி 2017
குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012
182 தொகுதிகள்
13 மற்றும் 17 திசம்பர் 2012
முதல் கட்சி இரண்டாம் கட்சி
Modi-WEF.jpg Flag of the Indian National Congress.svg
தலைவர் நரேந்திர மோடி சக்சின் கோகில்
கட்சி பாஜக காங்கிரசு
தலைவரானது 2001 2007
தலைவரின் தொகுதி மணிநகர் பாவ்நகர் தெற்கு
முந்தைய தேர்தல் 117 தொகுதிகள், 49.12 % 59 தொகுதிகள், 38.00 %

குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012 என்பது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை குறிக்கிறது. 13 மற்றும் 17 திசம்பர் 2012ல் இரண்டு கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற்றது. 20 திசம்பர் 2012ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தியது.

குஜராத் சட்டமன்றத்திற்கான 182 உறுப்பினர்களை அம்மாநில மக்கள் தேர்தெடுத்தனர்.[1]

தற்போதைய முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேந்திரமோடி 2001லிருந்து முதலமைச்சராக பதவி வகிக்கிறார்.[2] குஜராத்தின் முக்கிய எதிர்கட்சியாக தற்போது காங்கிரஸ் உள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் 71.32 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதல் கட்டத்தில் 70.75 சதவீதமும், இரண்டாம் கட்டம் 71.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.[3]

முக்கிய நிகழ்வுகள்[தொகு]

    • காங்கிரஸின் முன்னாள் துணை முதலமைச்சர் நர்ஹாரி அமீன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததைத் தொடர்ந்து பிஜேபியில் இணைந்தார்.

முடிவுகள்[தொகு]

திசம்பர் 20, 2012 அன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய ஆளும் பாஜக மூன்றாம் முறையாக அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பிஜேபி 115 தொகுதிகளும், காங்கிரஸ் 61 தொகுதிகளும் தேசியவாத காங்கிரஸ் 2, கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்தன் கட்சிக்கு 3, மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.[4]

தரம் கட்சி வென்றவர்கள்
1 பாஜக 115
2 இந்திய தேசிய காங்கிரஸ் 61
3 தேசியவாத காங்கிரஸ் 2
4 ஐக்கிய ஜனதா தளம் 1
5 இதர கட்சிகள் 3
மொத்தம் 182

மேற்கோள்கள்[தொகு]

  1. "Two-phase Assembly polls in Gujarat". தி இந்து. Press Trust of India (New Delhi). 3 October 2012. http://www.thehindu.com/news/national/twophase-assembly-polls-in-gujarat/article3961554.ece?homepage=true. பார்த்த நாள்: 3 October 2012. 
  2. Singh, Manisha (3 October 2012). "Gujarat Assembly Elections 2012: The countdown begins". Zee News. http://zeenews.india.com/blog/72/blog892.html. பார்த்த நாள்: October 04, 2012. 
  3. "Record voter turnout in Gujarat - 71.32%". Zee News. பார்த்த நாள் 18 December 2012.
  4. "Modi scores a hat-trick in Gujarat, BJP loses HP to Congress". டைம்ஸ் ஆப் இந்தியா. பார்த்த நாள் 20 திசம்பர் 2012.