கிளேர் பரேகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளேர் யோவான்னா பரேகு நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பிரித்தானியத் துகள் இயற்பியலாளராக உள்ளார். வானியற்பியல் ஆய்வுகளையும் குறுக்கீட்டளவியலையும் ஆகியவற்றைப் பயன்படுத்தி இருண்ட ஆற்றல் ஆராய்ச்சியில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் தான் குழந்தையாக யோதிரெல் வங்கி ஆய்வகத்தில் உள்ள உலோவெல் தொலைநோக்கியைக் கடந்து சென்றதே அண்டவியல் மீதான தனது அன்பைக் குறிக்கிறது எனக் கூறியுள்ளார்.[1] இவர் காலிங்வுடு கல்லூரியில் பயின்றார் , மேலும் கணிதத்திலும் செருமானிய மொழியிலும் ஏ - திறன்களை அடைந்தார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தைப் படித்தார் , 2004 இல் முதுகலைப் பட்டமும் , 2005 இல் கணித டிரிபோசின் மூன்றாம் பகுதியையும் பெற்றார்.[2] ஒரு மாணவராக இருந்தபோது , பரேகு இலெகோலாந்து வின்ட்சர் விடுதியில் பணிபுரிந்தார்.[2] தனது முதுகலை ஆராய்ச்சிக்காக , அளவன்புலங்கள், அண்ட மிகுவேக விரிவாக்கம் ஆகியவற்றைப் படிக்கும் பயன்பாட்டுக் கணிதம், கோட்பாட்டு இயற்பியல் துறையில் அன்னே - கிறித்தின் டேவிசில் சேர்ந்தார்.[3] மெசியர் 87 எனும் முனைவான பால்வெளிக் கருவில் உள்ள பச்சோந்தி துகள்களின் அறிகுறிகளை இவர் கண்டறிந்தார்.[4]

ஆராய்ச்சியும் தொழிலும்[தொகு]

பரேகு 2008 ஆம் ஆண்டில் தேசி( DESY) அமைப்பில் கோட்பாட்டு இயற்பியல் குழுவில் முதுமுனைவர் ஆய்வாளராகப் பணியமர்த்தப்பட்டார்.[5] தேசியில் இருந்தபோது , ஆக்சியான் - ஒளியன் மாற்றத்திற்கான வானியற்பியல் தகவல்களை இவர் கண்டுபிடித்தார்.[6] அவர் 2010 இல் ஜெனீவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று , அண்டவியலில் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டில் பரேகு நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் அன்னே மெக்லாரன் ஆய்வுறுப்பினராக பணியமர்த்தப்பட்டார். இருண்ட ஆற்றலை சோதிக்க வானியற்பியல் மூலங்களிலிருந்து ஒளியைக் கவனிப்பதே பரேகு பயன்படுத்துகிறார்.[7] 2013 ஆம் ஆண்டிலும் மீண்டும் 2018 ஆம் ஆண்டிலும் அவருக்கு அரசு கழகத்தின் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டது.[8][9] அவர் 2015 ஆம் ஆண்டில் இயற்பியல் நீறுவனத்தின் மேக்சுவெல் பதக்கத்தியும் பரிசையும் வென்றார்.[1] இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் தண்பொருள் மையத்தில் பரேகு பணிபுரிகிறார் , அங்கு அவர் ஒளித்துடிப்பு அணு குறுக்கீட்டளவிகளை விசையுணர் அனுக்கலை முடுக்குவதற்காக உருவாக்குகிறார்.[10] வானியற்பியல் நோக்கிடுகளை அணு நுட்பங்களுடன் இணைப்பதன்வழி , இருண்ட ஆற்றல் பொருளுடன் பல்வேறு வழிகளில் ஊடாடக்கூடிய சிறந்த கட்டுத்திட்டகளைப் பரேகு வழங்கியுள்ளார்.[7]

பொது ஈடுபாடு[தொகு]

' நான் ஓர் அறிவியல் அறிஞர்' , ' என்னை இங்கிருந்து வெளியேற்றுங்கள் ' உட்பட பல பொது ஈடுபாட்டு நடவடிக்கைகளில் பரேகு பங்கேற்றுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினருடன் ஒரு இணையர் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் வெசுட்டுமிமினிசுட்டர் அரண்மனையில் தனது ஆய்வுகளை வழங்கியுள்ளார்.[1] எடின்பர்கு பன்னாட்டு விழாவிலும் கே விழாவிலும் இவர் பங்கேற்றுள்ளார்.[1] ஆங்காங்கில் சயின்ஸ் அலைவ் போட்டியில் இங்கிலாந்தின் பேராளராகப் பிரித்தானிய மன்றத்தால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] விருது பெற்ற இயற்பியல் காணொலித் தொடரான அறுபது குறியீடுகள் நிகழ்வில் இவர் பங்கேற்றுள்ளார்.[12][13][14]

புழுத்துளை ஊடாக எனும் நிகழ்வின் இரண்டாம் கட்டத்தில் மார்கன் பிரீமேன் பரேகை நேர்காணல் செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Physics, Institute of. "Award-winning early-career physicist is put in the spotlight". www.iop.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  2. 2.0 2.1 "Profile - Electromagnetic Zone" (in en-US). Electromagnetic Zone. https://electromagneticm12.imascientist.org.uk/profile/clareburrage/. 
  3. "Dr. Clare Burrage - AcademiaNet". www.academia-net.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  4. Merali, Zeeya (2009-05-29). "Dark-energy particle spotted?" (in en). Nature. doi:10.1038/news.2009.531. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. https://www.nature.com/news/2009/090529/full/news.2009.531.html. 
  5. "Members of the Group". www.desy.de. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  6. Burrage, Clare; Davis, Anne-Christine; Shaw, Douglas J. (2009-05-21). "Active Galactic Nuclei Shed Light on Axion-like-Particles". Physical Review Letters 102 (20): 201101. doi:10.1103/PhysRevLett.102.201101. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9007. பப்மெட்:19519013. Bibcode: 2009PhRvL.102t1101B. 
  7. 7.0 7.1 Physics, Institute of. "2015 Maxwell medal and prize". www.iop.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  8. "Clare Burrage". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  9. "Clare Burrage". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  10. "Searching for dark energy candidates using atom interferometry". Imperial College London (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  11. "Science Alive 2016: Discover science in our daily lives | British Council". www.britishcouncil.hk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  12. Sixty Symbols (2015-02-13), Shining Light Through Walls - Sixty Symbols, பார்க்கப்பட்ட நாள் 2018-06-12
  13. Sixty Symbols (2015-05-01), Chameleon Particles and Dark Energy - Sixty Symbols, பார்க்கப்பட்ட நாள் 2018-06-12
  14. Butterworth, Jon (2015-02-15). "Dark Matter: an Axion to grind? | Jon Butterworth | Life & Physics". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளேர்_பரேகு&oldid=3782043" இலிருந்து மீள்விக்கப்பட்டது