காலக்டோசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காலக்டோசு | |
|---|---|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| en:KEGG | D04291 |
| MeSH | Galactose |
| ChEBI | CHEBI:28061 |
| Jmol-3D images | Image 1 |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | C6H12O6 |
| மோலார் நிறை | 180.156 கி மோல்−1 |
| அடர்த்தி | 1.723 கி/செமீ 3 |
| உருகுநிலை |
167 °C, 440 K, 333 °F |
| நீரில் கரைமை | 683.0 கி/லி |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
காலக்டோசு (Galactose; Gal) குளுக்கோசைவிட இனிப்பு குறைந்த சர்க்கரையாகும். காலக்டோசு குளுக்கோசின் இடைநிலை மாற்றியமாகும் (C4). அரைச்செல்லுலோசில் காணப்படும் காலக்டான், காலக்டோசு சர்க்கரையின் பல்பகுதியமாகும். நீராற்பகுப்பின் மூலம் காலக்டானிலிருந்து காலக்டோசைப் பெற முடியும்.
[தொகு] வடிவமும் மாற்றியமும்
காலக்டோசு திறந்த தொடரியாகவும், சுழல் வடிவிலும் காணப்படுகிறது. திறந்த தொடரி வடிவத்தில் தொடரி முடிவில் கார்போனைல் தொகுதி உள்ளது.
காலக்டோசின் நான்கு சுழல் மாற்றியன்கள்களில், இரண்டு ஆறுருப்பு பைரனோசு வளையத்தையும், இரண்டு ஐந்துருப்பு ஃபியுரனோசு வளையத்தையும் கொண்டுள்ளன. காலக்டோஃபியுரனோசு பாக்டீரியா, பூஞ்சையிலும், முதலுயிரியிலும் (புரோட்டோசோவா) உள்ளது. [1]
காலக்டோசின் வளர்சிதைமாற்றம்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Nassau et al. Galactofuranose Biosynthesis in Escherichia coli K-12:... JOURNAL OF BACTERIOLOGY, Feb. 1996, p. 1047–1052