கவுண்டமணி
| கவுண்டமணி | |
|---|---|
| 150px கவுண்டமணி |
|
| இயற் பெயர் | மணி |
| பிறப்பு | கோயம்புத்தூர், இந்தியா |
| வேறு பெயர் | கவுண்டர் மணி |
| தொழில் | நடிகர், நகைச்சுவை நடிகர் |
| நடிப்புக் காலம் | 1976—நடப்பு |
கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.
[தொகு] இளமையும் வாழ்க்கையும்
கவுண்டமணி இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் கிராமத்தில் 1950-ல் பிறந்தார். அவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது.அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர் பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.
[தொகு] இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள்:
இவர் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன. இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் பின்வருமாறு
- சின்னக்கவுண்டர்
- * உள்ளத்தை அள்ளித் தா
- மேட்டுக்குடி
- நடிகன்
- தங்கம்
- மன்னன்
- இந்தியன்
- நாட்டாமை
- மாமன் மகள்
- உனக்காக எல்லாம் உனக்காக
- முறை மாமன்
- சூரியன்
[தொகு] இவரது நகைச்சுவை சொல்லாடல்கள் சில:
- நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி..
- ”ஊ இஸ் த டிஸ்டபென்ஸ்” (சூரியன்)
- ”சொரி புடிச்ச மொன்ன நாயி” (கோயில் காளை)
- “இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா “(சூரியன்)
- ”ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சாணிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிர“ (வைதேகி காத்திருந்தாள்)
- ”நான் ரொம்ப பிஸி “ (சூரியன்)
- “ஒரு எளனிய எவ்ளோ நேரம்டா உறிஞ்சுவ போடா” (கோயில் காளை)
- ”இந்த டகால்டி தானே வேணாங்கிறது “
- “ வாட் எ பியூட்டி யெங் கேள் ” (உனக்காக எல்லாம் உனக்காக)
- “ டேய் தகப்பா ” (நாட்டாமை)
- “ஐயா தீஞ்ச மண்ட தர்மம் போடுங்க” (கோயில் காளை)
- “நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடிலப்பா” (மன்னன்)
- “இந்த நாயே 6 ஆங் கிளாஸ்ல அஞ்சு தடவ பெயில் ” (முறைமாமன்)
- “நாயக் கல்நாயக்” (கர்ணா)
- ”எங்கயோ கொழுத்து வேல செஞ்சுட்டுருந்த கம்முனாட்டி பையன் நீ ” (சின்ன தம்பி)
- “நான் எங்க எப்படி இருக்க வேண்டியவேன் ”
- "நாலு வீடு வாங்கி திங்குற நாய்க்கி பழமய பாரு பேச்ச பாரு" (சின்ன கவுண்டர்)
- ”பழமொழிய ஏண்டா சொல்றீங்க நாய்ங்களா ” (கரகாட்டகாரன்)
- “மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா ”