கர்நாடகாவின் சித்தி இனக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லாப்பூரில் ஒரு சித்தி இனச்சிறுமி

கர்நாடகாவின் சித்தி இனக்குழு (Siddis of Karnataka) மக்கள் ஆப்பிரிக்க பண்டு மக்களின் வழித்தோன்றல்கள் ஆவர். எல்லாப்பூர், ஆளியால், அங்க்கோலா, கானாபூர் உள்ளிட்ட இடங்களில் வாழும் இவர்களின் முன்னோர்களில் பலர் கிட்டத்தட்ட 300 முதல் 500 ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கீசியர்களால் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் சுட்டுகின்றன[1]. கர்நாடக சித்தி இனத்தவரின் மக்கள் தொகை 50 000 முதல் 60 000 வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது[2]. இந்தியாவில் குஜராத், ஆந்திராவில் சில பகுதிகளிலும் இவ்வினக்குழு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வரலாறு[தொகு]

கர்நாடகாவில் வாழும் சித்தி இனத்தோர் பெரும்பாலும் 16 முதல் 19 நூற்றாண்டு வரையிலான காலத்தில் அடிமைகளாகச் செயல்படுவதற்கு போர்த்துக்கீசியர்களால் அழைத்து வரப்பட்டனர்; அதே சமயம் (13ம் நூற்றாண்டிலேயே) இந்திய நவாபுகளாலும் சுல்தான்களாலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அழைத்து வரப்பட்டோர் படைவீரர்களாகவும் அடிமைகளாகவும் இருந்துள்ளனர். முதலில் கோவாவிற்கு வந்தோரில் சிலர் தப்பித்து, மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் பிழைத்தனர்; அவர்களின் வழித்தோன்றலில் வந்தோரே தற்போதைய கர்நாடக சித்திகளாக உள்ளனர்[3].

மொழியும் மதமும்[தொகு]

இவர்கள் பெரும்பாலும் கொங்கணி மொழியைப் பேசுகின்றனர்; சிலர் கன்னட மொழியும் மராத்தியும் இந்தியும் பேசுகின்றனர். இவர்களின் பெரும்பான்மை மதமாக இந்து மதம் உள்ளது; குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இசுலாத்தையும் கிறித்துவ மதத்தையும் மேற்கொண்டுள்ளனர். வெவ்வேறு சமயத்தைத் தழுவினாலும் எவ்வித வேறுபாடும் காட்டாமல் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்கின்றனர்[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. ஷா, அனிஷ் M. (15 சூலை 2011). "Indian Siddis: African Descendants with Indian Admixture". American Journal of Human Genetics 89 (1): 154–161. doi:10.1016/j.ajhg.2011.05.030. பப்மெட்:21741027. 
  2. JSTOR -- https://www.jstor.org/stable/41466541?seq=1 -- பக். 252
  3. NCBL:PubMed Center -- https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3135801/
  4. "The Siddhi Community". K.L.Kamat. Kamat's Potpourri. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.