கடலை மிட்டாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடலை மிட்டாய் என்றழைக்கப்படும் இனிப்பு வகை உடைத்த நிலக்கடலையைக் கருப்பட்டி பாகில் இட்டு தேங்காய்த் துருவல் கலந்து செய்யப்படும். கட்டம் கட்டமாய் வார்த்தும் உருண்டைகளாகப் பிடித்தும் விற்கின்றனர். சிலர் மணம் பொருட்டு ஏலக்காயும் சேர்க்கின்றனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக கோவில்பட்டி நகரில் பெயர் பெற்றது. கருப்பட்டி மிகுதியாகக் கிடைக்காத பகுதிகளில் வெல்லமிட்டும் செய்யப்படுகிறது. வட இந்தியாவிலும் சிக்கி என்ற பெயரில் இந்த இனிப்பு வெவ்வேறு மாறுதல்களுடன் செய்யப்படுகிறது. புனே அருகிலுள்ள உலோனாவாலா என்ற சுற்றுலா இடத்தில் இவ்வினிப்பு பெயர் பெற்றது.