புவிசார் குறியீடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். (எ. கா) ”சுவிஸ் கைக்கடிகாரங்கள்”” என்ற பெயர் சுவிட்சர்லாந்து என்ற இடத்தின் நன்மதிப்பை (சுவிஸ் பொறியியலாளர்களின் திறனால் உருவானது), “கைக்கடிகாரம்” என்ற பண்டத்துக்கு வழங்குகிறது.
தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு [தொகு]
பத்தமட பாய், தஞ்சாவூர் வீணை, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, மதுரை மல்லி போன்ற 6 பொருட்கள் புவிசார் குறியீடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது[1].