ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில்

ஆள்கூறுகள்: 1°27′49″N 103°45′51″E / 1.46361°N 103.76417°E / 1.46361; 103.76417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில்
Southern Integrated Gateway
Map
பொதுவான தகவல்கள்
வகைஎல்லைக் கட்டுப்பாடு
இடம்ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா
ஆள்கூற்று1°27′49″N 103°45′51″E / 1.46361°N 103.76417°E / 1.46361; 103.76417
அடிக்கல் நாட்டுதல்14 பெப்ரவரி 2003; 21 ஆண்டுகள் முன்னர் (2003-02-14)
கட்டுமான ஆரம்பம்2 திசம்பர் 2003; 20 ஆண்டுகள் முன்னர் (2003-12-02)
திறக்கப்பட்டது16 திசம்பர் 2008; 15 ஆண்டுகள் முன்னர் (2008-12-16)

ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில் (மலாய்: Gerbang Selatan Bersepadu; ஆங்கிலம்: Southern Integrated Gateway (SIG); என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு, புக்கிட் சாகர் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து வளாகத்தைக் குறிப்பிடுவதாகும். இந்த வளாகம் ஜொகூர் பாரு நகரின் ஜொகூர் பாரு சென்ட்ரல் தொடருந்து நிலையம்; மற்றும் சுல்தான் இசுகந்தர் சுங்கம், குடி நுழைவு மற்றும் தனிமைப் படுத்துதல் வளாகம்; சுல்தான் இசுகந்தர் கட்டிடம் ஆகியவற்றை உள்ளடக்கியது.[1]

ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் அவர்களின் பெயரில் இந்த வளாகத்திற்குப் பெயரிடப்பட்டது. ஜொகூர் பாரு சென்ட்ரல் நிலையமும்; சுல்தான் இசுகந்தர் கட்டிட வளாகமும்; ஜொகூர் பாரு மற்றும் தெற்கு தீபகற்ப மலேசியாவின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகின்றன.[2]

பொது[தொகு]

ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில் திட்டம் என்பது இசுகந்தர் மலேசியா மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கு மலேசிய பொதுப்பணித் துறை பொறுப்பேற்றது.[3]

சுல்தான் இசுகந்தர் சுங்கம், குடி நுழைவு மற்றும் தனிமைப் படுத்துதல் வளாகம் (Customs Immigration Quarantine Complex) வளாகம் 16 டிசம்பர் 2008-ஆம் தேதி, வாகனங்களின் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.

அக்டோபர் 2010-இல் ஜொகூர் பாரு சென்ட்ரல் தொடருந்து நிலையத்தின் செயல்பாட்டுச் சேவைகள் இணைக்கப்பட்டன. அத்துடன் பழைய ஜொகூர் பாரு தொடருந்து நிலையத்தின் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Southern Integrated Gateway refers to a complex in Johor Bahru, Malaysia incorporating the city's main railway station, JB Sentral, and a customs, immigration, and quarantine complex (CIQ), the Sultan Iskandar Customs, Immigration and Quarantine Complex". பார்க்கப்பட்ட நாள் 9 April 2024.
  2. "Malaysia has the most amazing customs complex - it is huge - as seen here in the following image. It is called the Southern Integrated Gateway". our life in Singapore. 9 July 2009. பார்க்கப்பட்ட நாள் 9 April 2024.
  3. "The Sultan Iskandar CIQ Complex is entered via the Johor Bahru Eastern Dispersal Link Expressway and the Johor Bahru Inner Ring Road. For pedestrians, there is a walkway connecting it to the city's transportation hub, JB Sentral". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 April 2024.

வெளி இணைப்புகள்[தொகு]