ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்
நாடுஇந்தியா
துவங்கியது2 அக்டோபர் 1975; 48 ஆண்டுகள் முன்னர் (1975-10-02)

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services) இது ஒரு இந்திய அரசு நலத்திட்டம் ஆகும். இது உணவு, மழலையர் கல்வி மற்றும் முதன்மையான சுகாதார பராமரிப்பு போன்றவற்றை 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்த சேவைகளில் அங்கன்வாடி மையங்களை குறிப்பபாக கிராமப்புற பகுதிகளில் நிறுவப்பட்டு முன்னணி தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல்நலக்குறைவு ஆகியவற்றைத் தவிர, பெண் குழந்தைகளுக்கும் அதே வளங்களை வழங்குவதன் மூலம் பாலின சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடும் நோக்கமாக கொண்ட திட்டமாகும்.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டம் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இல்லை என்று ஒரு 2005 ஆய்வு கண்டுபிடித்தது. பெரும்பாலும் இதை செயல்படுத்துவதில் உள்ள  சிக்கல்களாக கருதப்படுபவை வறுமை உள்ள மாநிலங்கள் குறைந்த பாதுகாப்பு நிதியைப் பெறுவதாகும். அதாவது, இத்திட்டத்திற்கு 2012-13 நிதியாண்டில் இந்திய மத்திய அரசாங்கத்தால் ₹ 159 பில்லியன் செலவிடப்பட்டது (அமெரிக்க $ 2.5 பில்லியன்) . ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் முக்கியமான பங்களிப்பாக கருதப்படுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு குறிப்பாக பலவீனமான குழந்தைகளுக்கு தரமான சத்துணவை வழங்குவதாகும்.[1]

பின்னணி[தொகு]

இந்தியாவில் இந்தியக் குழந்தைகளின் இறப்பு வீதமானது 34% ஆக உள்ளது.[2] ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 39% ஆக உள்ளது.[3] மேலும், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 25% குழந்தைகள் எடைக்குறைவுடனும் மற்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகளுடனும் காணப்படுகின்றனர். இந்தியக் குழந்தைகளின் நலம் தொடர்பான புள்ளி விவரங்கள் வளர்ந்த நாடுகளின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாக உள்ளது.[4]

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டமானது குழந்தைகளுக்கான தேசிய கொள்கைக்கிணங்க 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[5] பல ஆண்டுகளுக்கும் பிறகு இத்திட்டமானது மெல்ல மெல்ல வளர்ந்து உலகின் மிகப்பெரும் குடும்ப மற்றும் சமூக நலத்திட்டங்களில் ஒன்றாக மாறியது.[4] இத்திட்டமானது சில பத்தாண்டுகளாகத் தனது சிறந்த சேவையை அளித்து வருவதோடு இந்திய அரசாங்கமானது இத்திட்டம் பரவலாக இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் அனைவரையும் சென்றடைவதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது.[6]

சேவைகளின் எல்லை[தொகு]

அதன் நோக்கங்களை அடைய உதவுவதற்கு இந்தச் சேவை அமைப்பு பின்வரும் சேவைகளை வழங்குகின்றன:

  1. நோய்த்தடுப்பு 
  2. கூடுதல் ஊட்டச்சத்து 
  3. சுகாதார சோதனை 
  4. பரிந்துரை சேவைகள் 
  5. முன் பள்ளி அல்லாத முறையான கல்வி 
  6. ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல்

நடைமுறைப்படுத்தல்[தொகு]

ஊட்டச்சத்து குறைபாடு காணப்படும் காரணத்தால் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 6 வயதிற்கு குறைவான ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நாளும் 300 கிலோ கலோரிகளை (8-10 கிராம் புரதத்துடன்) வழங்குகிறது. பருவ வயது பெண் குழந்தைகளுக்கு இது 500 கிராம் கலோரியுள்ள உணவுடன் 25 கிராம் புரதமும் ஒவ்வொரு நாளும் வழங்குதல் வேண்டும்.

உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் பொது சுகாதார உள்கட்டமைப்பு மூலம் வழங்கப்படும் நோய்த்தடுப்பு, சுகாதார பரிசோதனை மற்றும் முக்கியமான பரிந்துரை சேவைகள் போன்றவை வழங்கப்படும். யுனிசெப் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்திற்கு 1975 ஆம் ஆண்டிலிருந்து அவசியமான பொருட்களை வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உலக வங்கியும் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் செலவினம் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு$ 10- $ 22 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியுதவி மூலம், மாநில அரசுகள் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு INR1.00 (1.6) வரை பங்களிப்புடன் வழங்கப்படுகிறது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Has the ICDS helped reduce stunting in India?". www.ideasforindia.in. Archived from the original on 2015-10-20. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  2. "Infant Mortality Rate (IMR) (per 1000 live births) | NITI Aayog, (National Institution for Transforming India), Government of India". niti.gov.in. பார்க்கப்பட்ட நாள் 18 February 2019.
  3. "India's Under-5 Mortality Now Matches Global Average, But Bangladesh, Nepal Do Better". IndiaSpend (in அமெரிக்க ஆங்கிலம்). 20 September 2018. பார்க்கப்பட்ட நாள் 18 February 2019.
  4. 4.0 4.1 "UNICEF - Respecting the rights of the Indian child". UNICEF. Archived from the original on 17 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 March 2011.
  5. "Integrated Child Development Services (ICDS) scheme: a program for holistic development of children in India". Indian Journal of Pediatrics 69 (7): 597–601. July 2002. doi:10.1007/bf02722688. பப்மெட்:12173700. https://archive.org/details/sim_indian-journal-of-pediatrics_2002-07_69_7/page/n56. 
  6. Dhar A (27 January 2011). "Infant mortality rate shows decline". The Hindu. Archived from the original on 25 October 2012.

வெளி இணைப்புகள்[தொகு]