ஒசே முகிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒசே முகிக்கா
José Mujica


உருகுவே நாட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
பதவியேற்பு
மார்ச் 1, 2010[1]
முன்னவர் தபாரே வாஸ்கெஸ்
அரசியல் கட்சி அகண்ட முன்னணி

பிறப்பு மே 20, 1935 (1935-05-20) (அகவை 77)
மொண்டெவிடியோ, உருகுவே
வாழ்க்கைத்
துணை
லூசியா தொப்பலான்ஸ்கி
துறை வேளாண்மை

ஒசே அல்பேர்ட்டோ முகிக்கா கோர்தானோ (José Alberto Mujica Cordano), எல் பெப்பே, (பிறப்பு: மே 20, 1935) என்பவர் உருகுவே நாட்டின் அரசியல்வாதியும், உருகுவேயின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, 2010 மார்ச் 1 இல் உருகுவேயின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார். இவர் 2005 முதல் 2008 வரை அமைச்சராக இரூந்தவர், தற்போது மேலவை உறுப்பினராக இருக்கிறார்.

[தொகு] அரசியல் பின்னணி

ஒசே முகிக்கா இளமையிலேயே உருகுவேயின் தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். பின்னர் "டுப்பமாரொசு" என்ற பொதுவுடமைக் கட்சியில் இணைந்து 1960களிலும் 70களிலும் ஆட்சியிலிருந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக கெரில்லா போரில் பங்கு கொண்டார். இவர் பின்னர் 1972 ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டார். 1973 இல் இடம்பெற்ர இராணுவப் புரட்சியை அடுத்து 14 ஆண்டுகள் இராணுவச்சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சூழ்நிலைகளில் அடிக்கடி தடுத்து வைக்கப்பட்ட முகிகா கிணற்றுக்கு அடியிலும் இரு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டார்[2]. சிறையில் இருக்கும் போது டுப்பமாரொசின் ஏனைய தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

1985 மக்களாட்சி ஏற்பட்டவுடன், பொது மன்னிப்பின் கீழ் முகிக்கா விடுதலை ஆனார்.

முகிக்கா பின்னர் டுப்பமாரொசின் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து புதிய கட்சியொன்றை ஏற்படுத்தி "அகண்ட முன்னணி" என்ற கூட்டமைப்பில் இணைந்தார். 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் இவரது கட்சி பெரும் வெற்றி பெற்றது.

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒசே_முகிக்கா&oldid=1065150" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்