எஸ்கிமோ உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்கிமோ உள்ளான்
லாவல் பல்கலைக்கழக நூலகத்தில் இதன் மாதிரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
இனம்:
N. borealis
இருசொற் பெயரீடு
Numenius borealis
(ஃபோர்ஸ்டர், 1772)
எஸ்கிமோ உள்ளான் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள்     அறியப்பட்ட பகுதிகள்     அநேகமாக இருக்கலாம்     இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

எஸ்கிமோ உள்ளான் அல்லது வடக்கத்திய உள்ளான் (Numenius borealis) என்பது ஒரு வகை உள்ளான் ஆகும். இது மேற்கு ஆர்க்டிக் கனடா மற்றும் அலாஸ்காவின் தூந்திரப் பகுதியில் உள்ள கரையோரங்களில் ஏராளமான எண்ணிக்கையில் காணப்பட்டது. 1800களின் பிற்பகுதியில் சுமார் 20 இலட்சம் பறவைகள் கொல்லப்பட்டன. இதன் காரணமாக இவற்றை 30 ஆண்டுகளுக்கும் மேலாக யாரும் பார்த்ததில்லை. இந்த இனம் இப்போது அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இப்பறவையின் நீளம் சுமார் 30 செமீ (12 அங்குலம்) ஆகும். இவை பெரும்பாலும் பெர்ரிகளை உண்ணக்கூடியவை.

பிரபலமான கலாச்சாரத்தில்[தொகு]

ஜான் ஜேம்ஸ் ஆதுபோனின் ஒரு விளக்கப்படம்

இந்தப் பறவையின் பரிதாப நிலை "லாஸ்ட் ஆப் த கர்லூவ்ஸ்" என்ற நாவலை எழுத ஃப்ரெட் போட்ஸ்வொர்த் என்பவரை ஊக்கப்படுத்தியது. இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 1972ம் ஆண்டின் "ஏ.பி.சி. ஆஃப்டர் ஸ்கூல் ஸ்பெஷல்" என்ற தொலைக்காட்சித் தொடர் எம்மி விருது பெற்றது.

உசாத்துணை[தொகு]

  1. "Numenius borealis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

மேலும் படிக்க [தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்கிமோ_உள்ளான்&oldid=3928268" இலிருந்து மீள்விக்கப்பட்டது