எலுமிச்சை அழகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலுமிச்சை அழகி
Ventral view
Dorsal view
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Papilio
இனம்:
P. demoleus
இருசொற் பெயரீடு
Papilio demoleus
L., 1758

எலுமிச்சை அழகி அல்லது தேசி வண்ணத்துப் பூச்சி (Lemon Butterfly, Papilio demoleus) என்பது பொதுவான தூங்குவால் (Swallowtail) வகை வண்ணத்துப் பூச்சியாகும். இவ்வண்ணத்துப்பூச்சிகளின் பெயர் இவை தங்கியிருக்கும் தாவரம் மூலம் உருவாகியது. இவை பொதுவாக தேசி, எலுமிச்சை, தோடை போன்ற தாவரங்களை சார்ந்து வாழும். ஏனைய தூங்குவால் வண்ணத்துப்பூச்சிகள் போன்று முதன்மையான வாலைக் கொண்டு காணப்படாது. இவ்வண்ணத்துப் பூச்சிகள் மரண வண்ணத்துப்பூச்சிகள் எனவும் அழைக்கப்படும். இதையொத்த ஆபிரிக்காவில் காணப்படும் பெபிலியோ டெமோடோகஸ் எனும் வண்ணத்துப்பூச்சியின் பெயரால் இதற்கு அப்பெயர் கிடைத்தது. இந்த வண்ணத்துப் பூச்சி தீங்குயிராகவும் ஊடுறுவும் வகையாகவும் உள்ளது. இவை எலுமிச்சை இலைகளை உண்டு பெரும் சேதம் விளைவிக்கின்றன. இந்த இனங்கள் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு பரவியுள்ளது.

விபரம்[தொகு]

வாலற்ற இவ்வண்ணத்துப் பூச்சி 80-100 மிமி வரையான இறகுகளையுடையது.[1] பின்புறம் கருப்பாகவும் பொதுவாக இறகுகளில் மங்கலான மஞ்சள் நிறமும் காணப்படும். இதில் அங்குமிங்கும் பெரியளவு புள்ளிகள் இறகு மீது காணப்படும். மேலுள்ள பின் இறக்கை நீல ஓரத்துடன் சிவப்பு புள்ளியைக் கொண்டு காணப்படும். பட்டுப்புழுவாகவுள்ள காலங்களில், வளர்ச்சிக்கான இவை இலை நார்களை அதிகம் உண்ணும்.[2]

வாழ்க்கை சுழற்சி[தொகு]

Life cycle of common lime butterfly (Papilio demoleus)

எலுமிச்சை வண்ணத்துப்பூச்சியின் தலைமுறைகளின் எண்ணிக்கை வெப்பநிலை பூமத்திய ரேகையைச் சார்ந்து, ஒன்பது தலைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிதமான வெப்பநிலையில் சீனாவில்  ஐந்து தலைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆய்வகத்தின் சிறந்த சூழலில், ஒரு தலைமுறை 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தலைமுறை எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி வயதில் முதிர்ச்சியடைவதற்கு சராசரியாக 26 முதல் 59 நாட்கள் வரை ஆகும். குளிர் கால வெப்ப நிலைகளில், எலுமிச்சை பட்டாம்பூச்சி தன் கூட்டுப்புழு பருவத்தினைக் கழிக்கிறது. பொதுவாக, இந்த பட்டாம்பூச்சி புழு பருவத்தில் ஐந்து இடைஉயிரிகளைக் கடக்கிறது. பெண் பட்டாம்பூச்சி செடிக்கு செடி சென்று இலையை தன் கால்களால் பிடித்துக்கொண்டு இலையின் மேற்புறத்தில் ஒரு முட்டையை இடும். முட்டையை இட்ட உடன் அங்கிருந்து சென்று விடும். முட்டை வட்டமாக இளம்மஞ்சள் நிறத்தில், அடிப்பகுதி தட்டையாகவும், மென்மையான மேற்பரப்பு கொண்டதாகவும் மற்றும்  சுமார் 1.5 மிமீ உயரம் கொண்டதாகவும் இருக்கும். வளமான இனப்பெருக்கத்திறமுடைய முட்டைகள் நுனியில் சிறு சிவப்பு குறியினை வளர்த்துக்கொள்ளும்.

இடைஉயிரி[தொகு]

புதிதாக வெளிவந்த புழு மேற்புறத்தில் உள்ள இலையின் நடுவில் செல்லும். முதல் இடைஉயிரி கருப்பு நிறமாகவும், கருப்பு தலைகள் மற்றும் இரண்டு வரிசை துணை முதுகு தசைப்பற்றுள்ள முள்ளந்தண்டுக்களும் கொண்டது. இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடைஉயிரி பளபளப்பான, இருண்ட-பழுப்பு தலை, 8 வது மற்றும் 9 வது பிரிவுகளில் வெள்ளை நிற குறியீடுகளைக் கொண்ட இந்த கம்பளிப்புழு பறவையின் எச்சத்தின் மீது வெள்ளையாக ஒட்டு போட்டது போல் காணப்படும். பறவையின் எச்சம் போல் இருப்பதால் திறந்த வெளிகளில் இருக்கும் பொது எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.

பறக்கும் தன்மை[தொகு]

இடைஉயிரி வளர வளர அதன் கம்பளிப்புழு உருளை வடிவமாக மாறி, பின்புறத்தில் கூம்பியும், வெளிர் பச்சை நிறத்தில் வெள்ளை மூச்சுத்துளை பட்டை போல் காணப்படும். நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் இரண்டு கருப்பு மற்றும் இரண்டு நீல நிற புள்ளிகள் கொண்ட ஒரு கூடுதல் கருப்பு பட்டை உருவாக்கப்பட்டு எட்டாவது மற்றும் ஒன்பதாவது பிரிவு/துண்டுகளில், முன்னர் தோன்றிய உருமறைப்புக் குறிப்புகள் ஒரு பழுப்பு மற்றும் வெள்ளை பட்டையை உருவாக்கி விடும். இந்த கட்டத்தில், கம்பளிப்புழுக்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த பட்டாம்பூச்சி ஒரு மண்ணைப் புழுதியாக, செழிப்பாகச் செய்யும் தன்மை உடையதாகவும், மலர்களை நோக்கி செல்வதில் ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கிறது. அதிவேக பறக்கும் தன்மையை எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்கு பயன்படுத்திக்கொள்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான பட்டாம்பூச்சி ஆகும், ஏனெனில் இதற்கு பலவிதமான பறக்கும் தன்மைகள் உள்ளன. இளங்காலையில் பறக்கும் தன்மை மிகவும் மெதுவாகவும், நேரம் செல்ல செல்ல வேகமாகவும் நேராகவும், கீழ்நோக்கியும் பறக்கும். அதிகமான வெயில் நேரத்தில் ஈரமான இடத்தில் அசைவற்று அமர்ந்திருக்கும்.

வாழ்விடம்[தொகு]

Lime butterflies mud-puddling with common emigrants (கொன்னை வெள்ளையன்) in India

பெபிலியோ டெமோடோகஸ் என்னும் இந்த பட்டாம்பூச்சி தாவரங்களைத் தாக்கக்கூடிய, பொதுவாக எல்லா இடத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சி ஆகும். பங்களாதேஷ், மேற்கு பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்), பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்பூச்சியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா (கலிமாந்தன், சுமத்ரா, சூலா, டலாட், ஆலோர் மற்றும் சும்பா), பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா (லார்ட் ஹோவ் தீவு உட்பட), தென் கொரியா (ஹேனான், குவாங்டாங் மாகாணத்தில்), ஹவாய் மற்றும் பிற பசிபிக் பெருங்கடல் தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. சவன்னாஹ், தரிசு நிலங்கள், தோட்டங்கள், பசுமையான மற்றும் அரை-பசுமையான காடுகளில் காணப்படுவதுடன், நீரோடை மற்றும் நதிகள் இருக்கும் இடங்களில் விரும்பி வாழ்கிறது. இந்தியாவில் இது பெரும்பாலும் சமவெளிகளில் காணப்படுகிறது. ஆனால் தீபகற்ப மலேசிய மலைகளில் மற்றும் இமயமலையில் 7,000 அடி (2,100 மீ) வரை காணலாம். இது நகர்ப்புற தோட்டங்களில் பொதுவாகக் காணப்படுவதுடன், வனப்பகுதிகளில் காணப்படலாம்.

பொருளாதார முக்கியத்துவம்[தொகு]

இந்தியா, பாக்கிஸ்தான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கில் பல பயிரிடப்பட்ட கிச்சிலி வகைகளில் எலுமிச்சை பட்டாம்பூச்சி ஒரு பொருளாதார சேதத்தை விளைவிக்கும் பூச்சியாகும். கம்பளிப்பூச்சிகள் முற்றிலும் இளம் கிச்சிலி மரங்கள் (2 அடி கீழே) மற்றும் சிட்ரஸ் நாற்றங்கால் முழுவதையும் அழிக்க வல்லது. முதிர்ந்த மரங்களில், கம்பளிப்பூச்சிகள் இளம் இலைகளையே உண்கிறது.

உசாத்துணை[தொகு]

  1. Evans, W.H. (1932). Identification of Indian Butterflies (Free full text download (first edition)) (2 ed.). Mumbai: Bombay Natural History Society. pp. 454 (with 32 plates). பார்க்கப்பட்ட நாள் 14 November 2010.
  2. Wynter-Blyth, M.A. (1957). Butterflies of the Indian Region (Reprint of 2009 by Today & Tomorrows Publishers, New Delhi ed.). Mumbai, India: Bombay Natural History Society. p. 523. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7019-232-9. பார்க்கப்பட்ட நாள் 22 October 2010. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Papilio demoleus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலுமிச்சை_அழகி&oldid=2526148" இலிருந்து மீள்விக்கப்பட்டது