எம்டன் (ஜெர்மனி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம்டன் (ஜெர்மனி)
Coat of arms Location
Coat of arms of எம்டன் (ஜெர்மனி)
Coordinates missing!
Administration
நாடு ஜெர்மனி
மாநிலம் Invalid state: "நெய்டர்சாக்சென்"
மாவட்டம் கிரெயஸ்பிரெய் ஸ்டாட்
ஒபர்பர்கர்மெய்ஸ்டர் ஆல்வின் பிரிங்க்மன் (SPD)
Basic statistics
Area 112.33 ச.கி.மீ (43.4 ச.மை)
Elevation 1 m  (3 ft)
Population 51,692  (30 ஜூன் 2006)
 - Density 460 /km² (1,192 /sq mi)
Other information
Time zone CET/CEST (UTC+1/+2)
Licence plate EMD
Postal codes 26721, 26723, 26725
Area codes 04921, 04927 (Knock)

எம்டன் (Emden) ஜெர்மனியின் வடமேற்காக அமைந்துள்ள துறைமுக நகரம் எம்டன். 2006 முதல் கிழக்கு பிரிசியா வின் முக்கிய நகராமியிற்று, இதன் மொத்த மக்கட்தொகை 51,692 ஆகும். இந்நகரம் நிர்மானிக்கப்பட்ட ஆண்டுகள் சரியாக கணிக்கமுடியவில்லை. 8 வது நூற்றாண்டுகளில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் பழமைப் பெயர்களாக அமுதான், எம்டா, எம்டன் என்றுக் கூறப்படுகிறது. 1495 ல் முதலாம் மேக்ஸ்மிலன் காலத்தில் இது நகர அங்கீகாரம் பெற்றது.

17 ம் நூற்றாண்டுகளில் டச்சுக்காரர்களின் குடியேற்றத்தால் இது மிகவும் செல்வ செழிப்புமிக்க நாகரமாக விளங்கியது. அப்போது புராட்டஸ்தாந்து பரவியிருந்த்து. முதல் டச்சு மொழியாக்கத்தின் விவிலியம் வெளியிடப்பட்டது. பிரஞ்சு நெப்போலியன் காலத்தில் கிழக்கு பிரிசியா அதனை சுற்றியுள்ள நாகரங்கள் ஹாலந்து இராச்சியத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. 1870 களில் இந்நகரில் தொழிற்புரட்சிகள் ஏற்பட்டன.


19 நூற்றாண்டுகளில் மிகப்பெரியக் கால்வாய்த்திட்டமான டார்ட்மன்ட் எம்ஸ் கால்வாய்த்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது எம்டன் மற்றும் ரக்ர் பகுதிகளை இணைத்தன. இதனால் 1970 வரை எம்டன் துறைமுக நகரமாக இருக்கக் காரணமாயிற்று. 1903 ஆம் ஆரம்பிக்கப்பட்ட கப்பல் கட்டும் துறைமுகம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. இதன் முக்கிய அழகிய எழில் மிக்க கட்டடங்கள் இரண்டாம் உலகப்போரின் தாக்குதலால் முற்றிலும் அழிந்தது. மிகவும் மோசமானத் தாக்குதல் செப்டம்பர் 6, 1944 அன்று நடந்தது. 80 சதவீத வீடுகள் மற்றும் நகர சொத்துக்கள் அழிந்தன. ஏறத்தாழ 18 வருடங்களுக்குப் பிறகு இந்நகரம் செப்டம்பர் 6, 1962, ல் மீண்டும் செப்பனிடப்பட்டது.

இந்நகரின் முக்கியத் தொழில்களாக கப்பல் கட்டும் தொழிலும், மோட்டார் வண்டிகள் தயாரிப்புகளும் இருக்கின்றன. 1973 ல் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்பொழுது 3500 மாணவர்கள் வருடந்தோறும் கல்வியறிவு பெறுகின்றனர்.


முக்கிய விளையாட்டு கால்பந்தாட்டம். அதிகம் பேர் கால்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபாடுகொண்டுள்ளனர். இங்கு பல கால்பந்தாட்டக் குழுக்கள் உள்ளன. அதிகம் பேர் கால்பந்தாட்ட விளையாட்டை ரசிக்கின்றனர். ஒரேசமயத்தில் 12000 பேர் கண்டு களிக்கும் அளவுக்கு இங்கு அரங்குகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன பல நாட்களுக்கு முன்பே முன்பதிவும் செய்யப்படுகின்றது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF)" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்