உசாண்ட் சண்டை (1944)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உஷாண்ட் சண்டை (1944) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உஷாண்ட் சண்டை
ஓவர்லார்ட் நடவடிக்கை பகுதி

சண்டையில் துளை விழுந்த தங்கள் கப்பலின் கொடியைக் காட்டுகின்றனர் எச். எம். எசு டார்டாரின் மாலுமிகள்
நாள் 9 ஜூன் 1944
இடம் ஆங்கிலக் கால்வாய்
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
போலந்து போலந்து
கனடா கனடா
நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் பெசில் ஜோன்ஸ் நாட்சி ஜெர்மனி தியடோர் வோன் பெக்டோல்ஷீம்
பலம்
8 டெஸ்டிராயர்கள் 4 டெஸ்டிராயர்கள்
இழப்புகள்
1 கப்பல் சேதம் 2 கப்பல்கள் நாசம்

உசாண்ட் சண்டை (Battle of Ushant, உஷாண்ட் சண்டை) இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு கடல் சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டு டெஸ்டிராயர் ஃபுளோட்டில்லா ஒன்று பிரான்சு கரையோரத்தில் நாசி ஜெர்மனியின் டெஸ்டிராயர் ஃபுளோட்டில்லாவை தாக்கித் தோற்கடித்தது. இது பிரிட்டானி சண்டை என்றும் அழைக்கப்படுகிறது.

நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. இப்படையெடுப்பினை எதிர்க்க தென்மேற்கு பிரான்சின் கிரோண்ட் பகுதிலிருந்த 8வது ஜெர்மானிய டெஸ்டிராயர் ஃபுளோட்டில்லாவை பிரெஸ்ட் துறைமுகத்துக்குச் செல்லும்படி ஜெர்மானியக் கடற்படைத் தளபதிகள் உத்தரவிட்டனர். பிரெஸ்ட் துறைமுகத்தில் அவற்றின் ஆயுதங்கள் அதிகரிக்கப்பட்டு சுடு ஆற்றல் (fire power) கூட்டப்பட்டது. பின் அங்கிருந்து செர்போர்க் துறைமுகத்துக்கு அவை புறப்பட்டன. இக்கப்பல்களின் இலக்கினை அல்ட்ரா (எதிரி நாடுகளின் மறைகுறியீட்டுத் தகவலகளைப் படிக்கும் திட்டம்) திட்டத்தின் மூலம் தெரிந்து கொண்ட நேச நாட்டுத் தளபதிகள் அவற்றைத் தடுக்க பிரிட்டானிய 8வது டெஸ்டிராயர் ஃபுளோட்டில்லாவை அனுப்பினர். இதில் போலந்திய மற்றும் கனடியக் கப்பல்களும் இடம்பெற்றிருந்தன. ஜூன் 9ம் தேதி இரு கடற்படைப் பிரிவுகளும் ஆங்கிலக் கால்வாயில் உஷாண்ட் தீவு அருகே மோதின. பீரங்கிகளாலும் டொர்பீடோக்களாலும் தாக்கி சண்டையிட்டன. இச்சண்டையில் ஒரு ஜெர்மானியக் கப்பல் மூழ்கியது, இன்னொன்று தப்ப முயன்ற போது கரையில் தரை தட்டி சேதமடைந்தது. மற்ற இரு கப்பல்களும் தப்பி விட்டன. பிரிட்டானிய தரப்பில் ஒரு கப்பலுக்கு மட்டும் சேதமேற்பட்டது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசாண்ட்_சண்டை_(1944)&oldid=2148682" இலிருந்து மீள்விக்கப்பட்டது