ஜெம்புளூ சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெம்புளூ சண்டை
பெல்ஜியம் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி

ஹன்னூட் மற்றும் ஜெம்புளூ சண்டைகள் (வரைபடம்)
நாள் 14 – 15 மே 1940
இடம் ஜெம்புளூ மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்
கீழ்நிலை உத்தியளவில் பிரெஞ்சு வெற்றி

செய்முறையளவில் ஜெர்மானிய வெற்றி
மேல்நிலை உத்தியளவில் யாருக்கும் வெற்றியில்லை[1]

பிரிவினர்
பிரான்சு பிரான்சு நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
பிரான்சு ரெனே பிரியூ நாட்சி ஜெர்மனி எரிக் ஹொயப்னர்
நாட்சி ஜெர்மனி விக்டர் வான் ஷ்வெட்லர்
பலம்
2 கவச டிவிசன்களின் பிரிவுகள்
3 எந்திர டிவிசன்கள்
3 தரைப்படை டிவிசன்கள்
2 பான்சர் (கவச) டிவிசன்கள்
3 தரைப்படை டிவிசன்கள்
இழப்புகள்
டாங்குகள் எண்ணிக்கை தெரியவில்லை
~ 2,000 படைவீரர்கள்
எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை
ஜெர்மானிய டாங்குகளில் 33—37 % நாசமாகின
304 மாண்டவர்
413 காயமடைந்தவர்
29 காணாமல் போனவர்

ஜெம்புளூ சண்டை (Battle of Gembloux) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியத்தைத் தாக்கியதால் பிரெஞ்சு முதன்மைப் படைகளை ஆர்டென் காட்டுப் பகுதியிலிருந்து நகர்ந்து பெல்ஜியத்தை நோக்கி விரைந்தன.

மே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது இருமுனைத் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மனியின் போர் உபாயத் திட்டமான “மஞ்சள் திட்ட” (ஜெர்மன்: Fall Gelb) த்தின்படி பெல்ஜியம் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதலாகும். இதன் மூலம் பிரான்சின் முதன்மைப் படைப்பிரிவுகளை பெல்ஜியத்திற்கு வரவழைக்க வேண்டும். அவை பெல்ஜியத்தை அடைந்த பின், அவற்றின் பின்பகுதியில் ஆர்டென் காடு வழியாக ஜெர்மானிய ஆர்மி குரூப் ஏ முக்கியத் தாக்குதல் நடத்த வேண்டுமென்று மஞ்சள் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரெஞ்சு முதலாம் ஆர்மியை பெல்ஜியத்துக்கு இழுக்க மே 12ம் தேதி இரண்டு ஜெர்மானிய கவச டிவிசன்கள் பெல்ஜியத்தின் ஹன்னூட் பகுதியைத் தாக்கின. ஹன்னூட் சண்டையில் பிரெஞ்சுப் படைகள் வெற்றியடைந்த பின்னர் ஜெம்புளூ இடைவெளியில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சுப் படைகளை ஜெர்மானிய 6வது ஆர்மி தாக்கியது. மே 14, 15 இரு நாட்கள் நடந்த இந்த சண்டையில் ஜெர்மானிய படைகளால் பிரெஞ்சு பாதுப்பாப்பு கோட்டை ஊடுருவ முடியவில்லை. சுற்றிக் கொண்டும் போக முடியவில்லை. இச்சண்டை பிரெஞ்சுப் படைகளுக்கு வெற்றியில் முடிவடைந்தது. ஆனால் ஹன்னூட்டிலும் ஜெம்புளூவிலும் பிரெஞ்சு முதலாம் ஆர்மிக்கு ஏற்பட்ட சேதங்கள் அதன் பலத்தை வெகுவாகக் குறைத்தன. ஜெர்மானியப் படைகளின் ஆர்டென் காட்டுத் தாக்குதலால், அப்படை பின் வாங்கும் வழி அடைபடும் நிலை உண்டானது. எனவே இப்பிரிவு பெல்ஜியத்திலிருந்து பின்வாங்கி லீல் நகருக்குச் சென்றது. மே 28ம் தேதி அங்கு நடந்த சண்டையில் ஜெர்மானியப் படைகளால் முழுதும் தோற்கடிகப்பட்டது. ஜெர்மானிய இருமுனைத் தாக்குதல் எளிதில் வெற்றியடைந்ததால் ஹன்னூட்டிலும், ஜெம்புளூவிலும் பிரெஞ்சுப் படைகள் அடைந்த வெற்றி பயனில்லாமல் போனது.


அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "The Allied success at Gembloux was nullified by the German victory further south, but Reichenau's failure to destroy or at least defeat the Allied corps de bataille at Gembloux was crucial. It is true that the Allied high command proved unable in the days following to utilize the corps de bataille to restore the Allied front. But it took the Wehrmacht another two weeks of fighting to encircle and capture part of First Army, allowing the rest and the bulk of the BEF to escape to Dunkirk"Gunsberg 2000, p. 140.

மேற்கோள்கள்[தொகு]

  • Brian Bond. France and Belgium, 1939–1940. London : Davis-Poynter. 1990. ISBN 0706701682
  • Buchner, Alex. Das Handbuch der deutschen Infanterie 1939-1945. Wölfersheim-Berstadt: Podzun-Pallas, 1987. ISBN 3-89555-041-8.
  • Frieser, Karl-Heinz. The Blitzkrieg Legend. Naval Institute Press. 2005. ISBN 978-1-59114-294-2
  • Gunsburg, Jeffery A. 'The Battle of Gembloux, 14–15 May 1940: The "Blitzkrieg" Checked'. The Journal of Military History, Vol. 64, No. 1 (Jan., 2000), pp. 97–140
  • Healy, Mark, Ed. Prigent, John &. Panzerwaffe: The Campaigns in the West 1940. Vol. 1. London. Ian Allan Publishing. 2008 ISBN 978-071103-240-8
  • Sumner, Ian, and Vauvillier, François. The French Army 1939-45 (1). London: Osprey, 1998. ISBN 1-85532-666-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெம்புளூ_சண்டை&oldid=2698708" இலிருந்து மீள்விக்கப்பட்டது