உலக சதுரங்க வாகை 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக சதுரங்க வாகை 2023
World Chess Championship 2018
கோல்பர்ன், இலண்டன்
9–28 நவம்பர் 2018
 
நடப்பு வாகையாளர்
அறைகூவல் வீரர்
 
மாக்னசு கார்ல்சன்
மாக்னசு கார்ல்சன்
பபியானோ கருவானா
பபியானோ கருவானா
 நோர்வே மாக்னசு கார்ல்சன்ஐக்கிய அமெரிக்கா பபியானோ கருவானா
 
6 (3)மதிப்பெண்கள்6 (0)
ஆட்டம் 1½115 நகர்வு சமம்½
ஆட்டம் 2½49 நகர்வு சமம்½
ஆட்டம் 3½49 நகர்வு சமம்½
ஆட்டம் 4½34 நகர்வு சமம்½
ஆட்டம் 5½34 நகர்வு சமம்½
ஆட்டம் 6½80 நகர்வு சமம்½
ஆட்டம் 7½40 நகர்வு சமம்½
ஆட்டம் 8½38 நகர்வு சமம்½
ஆட்டம் 9½56 நகர்வு சமம்½
ஆட்டம் 10½54 நகர்வு சமம்½
ஆட்டம் 11½55 நகர்வு சமம்½
ஆட்டம் 12½31 நகர்வு சமம்½
சமன்முறி 131 55 நகர்வுகள்0
சமன்முறி 141 28 நகர்வுகள்0
சமன்முறி 151 51 நகர்வுகள்0
 பிறப்பு 30 நவம்பர் 1990
அகவை 27
பிறப்பு 30 சூலை 1992
அகவை 26
 உலக சதுரங்க வாகை 2016 வெற்றியாளர்வேட்பாளர் சுற்று 2018 வெற்றியாளர்
 தரவுகோள்: 2835
(உலக இல. 1)
தரவுகோள்: 2832
(உலக இல. 2)
← 2016
2021 →

உலக சதுரங்க வாகை 2018 (World Chess Championship 2018) என்பது உலக சதுரங்க வாகையாளரைத் தேர்ந்தெடுக்க, 2013 இல் இருந்து வாகையாளராக இருக்கும் மாக்னசு கார்ல்சனுக்கும், பபியானோ கருவானாவிற்கும் இடையே நடைபெற்ற சுற்றுப் போட்டியாகும். பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு, அதன் வணிகக் கூட்டு பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளினால் நடத்தப்பட்ட 12-ஆட்ட சுற்று இலண்டனில் 2018 நவம்பர் 9 முதல் நவம்பர் 28 வரை இடம்பெற்றது.[1][2]

மரபுசார் நேரக்கட்டுப்பாட்டுடனான ஆட்டம் 12 அடுத்தடுத்த சமநிலைகளுடன் முடிவடைந்தது. உலக வாகைப் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களும் சமநிலையில் முடிவடைந்தது இதுவே முதல் தடவையாகும்.[3] நவம்பர் 28 இல், சமன்முறியாக விரைவு சதுரங்க ஆட்ட முறை ஆடப்பட்டது. கார்ல்சன் அடுத்தடுத்த மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நான்காவது தடவையாக உலக வாகையாளரானார்.

வேட்பாளர் சுற்றின் முடிவுகள்[தொகு]

நடப்பு வாகையாளர் கார்ல்சனுடன் போட்டியிடுவதற்காக நடத்தப்பட்ட 2018 வேட்பாளர் சுற்றில் கருவானா வெற்றி பெற்றார். இப்போட்டிகள் பெர்லினில் 2018 மார்ச் 10 முதல் 18 வரை எட்டு போட்டியாளர்களுடன் இரட்டை தொடர் சுழல்முறைப் போட்டி முறையில் நடத்தப்பட்டன.[4]

இதன் இறுதி முடிவுகள் வருமாறு:[5][6]

2018 வேட்பாளர் சுற்றின் இறுதி முடிவுகள்
தரநிலை Player Score H2H Wins தகுதி கரு மாம் கரி திங் கிராம் கிரி சோ அரோ
1  பபியானோ கருவானா (USA) 9 5 வாகைப் போட்டிக்கு ½ ½ ½ 0 ½ ½ ½ 1 ½ 1 1 ½ 1 1
2  சக்ரியார் மெமெதியாரொவ் (AZE) 8 1.5 3 ½ ½ ½ 1 0 ½ 1 ½ 1 ½ ½ ½ ½ ½
3  செர்கே கரியாக்கின் (RUS) 8 0.5 4 1 ½ 0 ½ ½ ½ 1 ½ ½ ½ 1 ½ 0 1
4  திங் லிரென் (CHN) 7.5 1 ½ ½ ½ 1 ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½
5  விளாதிமிர் கிராம்னிக் (RUS) 6.5 1 3 0 ½ ½ 0 ½ 0 ½ ½ 1 0 ½ ½ 1 1
6  அலெக்சாந்தர் கிரிசுச்சுக் (RUS) 6.5 1 2 0 ½ ½ 0 ½ ½ ½ ½ 1 0 1 ½ ½ ½
7  உவெசுலி சோ (USA) 6 1 ½ 0 ½ ½ ½ 0 ½ ½ ½ ½ ½ 0 1 ½
8  லெவன் அரோனியான் (ARM) 4.5 1 0 0 ½ ½ 0 1 ½ ½ 0 0 ½ ½ ½ 0
மூலம்: ஃபிடே வேட்பாளர்கள் சுற்று 2018
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள், 2) சம வீரர்களுக்கிடையே நேருக்கு நேர் மதிப்பெண், 3) மொத்த வெற்றிகளின் எண்ணிக்கை, 4) சொன்போர்ன்–பெர்கர் மதிப்பெண், 5) சமன்முறி ஆட்டங்கள்.[5]

குறிப்பு: வெள்ளைப் பின்னணியில் உள்ள கட்டத்தில் உள்ள எண்கள், அந்தந்த எதிராளியை வெள்ளைக் காய்களுடன் விளையாடும் முடிவைக் குறிக்கிறது (கருப்பு பின்னணியில் இருந்தால் கருப்பு துண்டுகள்).

2018 வாகையாளர் இறுதி முடிவுகள்[தொகு]

உலக வாகையாளருக்கான போட்டி மாக்னசு கார்ல்சன், பபியானோ கருவானா ஆகியோருக்கிடையில் இலண்டனில் 2018 நவம்பர் 8 முதல் 28 வரை நடைபெற்றது.

உலக சதுரங்க வாகை 2018
தரவரிசை ஆட்டங்கள் புள்ளிகள் நேர்முறி ஆட்டங்கள் மொத்தம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
 மாக்னசு கார்ல்சன் (NOR) 2835 ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ 6 1 1 1 9
 பபியானோ கருவானா (USA) 2832 ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ 6 0 0 0 6

மேற்கோள்கள்[தொகு]

  1. FIDE-Agon agreement (3.1a) of Annex 11, 2012 FIDE General Assembly.
  2. "London Will Host FIDE World Chess Championship Match 2018". World Chess. 29 November 2017. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  3. "Text-Only NPR.org : Stalemate To Checkmate: After 12 Draws, World Chess Championship Will Speed Up". text.npr.org. பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
  4. "The FIDE World Chess Candidates Tournament will take place in Berlin, Germany, on March 10 — 28, 2018". Archived from the original on 11 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
  5. 5.0 5.1 "Rules & regulations for the Candidates Tournament of the FIDE World Championship cycle 2016–2018" (PDF). பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
  6. "Kramnik to play 2018 Candidates". Chessbase. 30 October 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சதுரங்க_வாகை_2018&oldid=3781739" இலிருந்து மீள்விக்கப்பட்டது