உமர் காலித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமர் காலித்
பிறப்பு11 ஆகஸ்ட் 1987
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்டெல்லி பல்கலைக்கழகம் (B.A) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (M. A., M.Phil, PhD.)
செயற்பாட்டுக்
காலம்
2016  – தற்போது வரை

உமர் காலித் (சையத் உமர் காலித்) ஓர் மனித உரிமை ஆர்வலர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனநாயக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தார்.

காஷிமிரி பிரிவினைவாதிகள் அப்சல் குரு மற்றும் மக்பூல் பட் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போராடியதற்காக இவர் மீதுதேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

உமர் காலித் டெல்லியின் ஜாமியா நகரில் பிறந்தார். கடந்த 30 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார். இவரது தந்தை சையத் காசிம் ரசூல் இலியாஸ் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இவரது தாயார் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்.[1] இவரது தந்தை இலியாஸ் வேல்ஃபேர் கட்சியின் தேசியத் தலைவரும், இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கத்தின் முன்னாள் உறுப்பினருமாவார்.[2]

காலித் டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார்.[3] பின்னர் ஜவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை மற்றும் கலாநிதிப் பட்டம் பெற்றார். இவரது ஆய்வுக் கட்டுரை ' ஹோஸ் மக்களை பற்றியது' [4]

செயல்பாடு மற்றும் சர்ச்சைகள்[தொகு]

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக தேச துரோக வழக்கு[தொகு]

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் 2001 இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்ட அப்சல் குரு மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதி மக்பூல் பட் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்தின்போது சில மாணவர்கள் எழுப்பிய கோஷங்கள் "இந்திய எதிர்ப்பு" கோஷங்கள் என்று கருதப்பட்டு இவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யபட்டது. இதில் உமர் காலித் முக்கியமானவர் என்று சொல்லபட்டது.[5]

போராட்டம் நடந்து முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ், தேசத் துரோகம் மற்றும் குற்றச் சதி குற்றச்சாட்டிண் கீழ் டெல்லி காவல்துறை ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை கைது செய்தது.[6] இதற்கிடையில்இது தொடர்பான ஐந்து மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, ராம நாகா, அனந்த் பிரகாஷ் மற்றும் அசுதோஷ்குமார் ஆகியோர் தலைமறைவாகினர். 10 நாட்களுக்குப் பிறகு உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் போலீசில்டெல்லி காவல்துறையினர் முன் சரணடைந்தனர்.[7]

பீமா கோரேகான் சம்பவம்[தொகு]

புனேவில் கொலோகான் என்ற பகுதியில் பிரித்தானிய இந்திய இராணுவத்திற்கும் பேஷ்வாக்களுக்கும் இடையில் நடைபெற்ற கோரேகான் போரின் 200வது ஆண்டை குறிக்கும் வகையில் நடைப்பெற்ற "எல்கார் பரிஷத்" என்ற பேரணியில் கலந்துக்கொண்டு ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் பேசினர். இவர்களது பேச்சு இரு சமூகத்திற்கு இடையில் சண்டையை ஊக்குவிக்கும் வகையில் இருந்ததாக கூறப்பட்டு இருவர் மீதும் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபபட்டது.[8]

படுகொலை முயற்சி[தொகு]

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று, காலித்தை படுகொலை செய்ய முயற்சி நடந்தது. அதிலிருந்து காலித் உயிர் தப்பினார்.[9][10][11] படுகொலை முயற்சியில் ஈடுபட்டதாக இருவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று அரியானாவின் ஃபதேஹாபாத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர், குற்றம் சாட்டப்பட்டவர் காலித்தின் படுகொலை சுதந்திர தின பரிசு என்று குறிபிட்டு ஆகஸ்ட் 15 அன்று பேஸ்புக்கில் ஒரு வீடியோவை பதிவேற்றியிருந்தனர். மேலும் இவர்கள் பசு பாதுகாப்பு பிரச்சினையையும் முன்னிலைப்படுத்தினர்

UAPA வழக்கில் கைது[தொகு]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வந்தப்போதுபோது உமர் காலித் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இவரின் பேச்சு "ஆத்திரமூட்டும் பேச்சுக்கள்" என்று டெல்லி காவல்துறை இவர் மீதுசட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 கீழ் வழக்கு பதிவு செய்தது.[12][13] மேலும் இவரின் பேச்சுகள் டெல்லி கலவரத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது என்று டெல்லி காவல்துறை கருதியது. 2020 செப்டம்பர் 14 அன்று டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் உமர் காலிதை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Umar Khalid on Decoding India" (in en-US). SKEP. 2018-08-27. https://www.youtube.com/watch?v=Rt_Y_jh8Xc0. 
  2. "JNU student’s father: If you’re branding him a traitor for my (SIMI) past". indianexpress.com. February 19, 2016. https://indianexpress.com/article/india/india-news-india/kanhaiya-kumarsyed-qasim-rasool-ilyas-jnu-students-father-if-youe-branding-him-a-traitor-for-my-simi-past/. 
  3. "My name is Umar Khalid and I am a Delhi University student…" (in en-US). The Indian Express. 2016-02-28. https://indianexpress.com/article/india/india-news-india/jnu-row-my-name-is-umar-khalid-and-i-am-a-delhi-university-student/. 
  4. "Umar Khalid, My Student" (in en-US). The Indian Express. 2016-02-26. https://indianexpress.com/article/opinion/columns/jnu-protest-sedition-umar-khalid-anirban-my-student/. 
  5. "Afzal Guru: A martyr in JNU campus? Anti-India slogans raised, no arrests made". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-12.
  6. "JNU student leader held on 'sedition' charges over Afzal Guru event". https://indianexpress.com/article/india/india-news-india/afzal-guru-film-screening-jnu-student-leader-held-for-sedition/. 
  7. "JNU row: Kanhaiya Kumar to lead push for Umar and Anirban's release from custody - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-12.
  8. "Bhima-Koregaon violence: FIR against Jignesh Mevani, Umar Khalid for 'provocative' speeches in Pune" (in en-US). The Indian Express. 2018-01-04. https://indianexpress.com/article/cities/pune/fir-registered-against-jignesh-mevani-umar-khaid-for-provocative-speeches-in-pune-bhima-koregaon-5010950/. 
  9. "JNU's Umar Khalid has narrow escape, assailant's gun jams" (in en-US). The Indian Express. 2018-08-13. https://indianexpress.com/article/india/umar-khalid-shot-constitution-club-of-india-delhi-unhurt-5304467/. 
  10. "Dastardly attempt to assassinate Umar Khalid | CJP" (in en-GB). CJP. 2018-08-13. https://cjp.org.in/dastardly-attempt-to-assassinate-umar-khalid/. 
  11. "Attack on Umar Khalid: Protesters ask police why no action - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/delhi/protesters-ask-police-why-no-action/articleshow/65431399.cms. 
  12. "Delhi Police Books Umar Khalid, Meeran Haider, Safoora Zargar Under UAPA". HuffPost India (in ஆங்கிலம்). 2020-04-22. பார்க்கப்பட்ட நாள் 2020-05-10.
  13. "A Lockdown of Rights: Umar Khalid, Yogendra Yadav on Delhi Arrests". The Quint (in ஆங்கிலம்). 2020-05-05. பார்க்கப்பட்ட நாள் 2020-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்_காலித்&oldid=3924688" இலிருந்து மீள்விக்கப்பட்டது