உப்பை வடிக்கும் சிறப்பு உறுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடற் பறவைகளும் ஊர்வன இனத்தைச் சார்ந்த பிராணிகளும் உப்புகளை வடிகட்டும் சிறப்பு உறுப்புகளைப் பெற்றுள்ளன. அவை உப்புச் சுரப்பி (Salt gland) எனப்படும். இவை வெவ்வேறு உயிரினங்களில் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன. இந்த சுரப்பிகள் பல சுரப்புக் குழாய்களைக் கொண்ட மடல்களாக உள்ளன, அவை மையத்தில் உள்ள வெளியேற்றக் கால்வாயிலிருந்து வெளியில் பரவுகின்றன. சுரக்கும் குழாய்கள் எபிதீலியம் செல்களின் ஒற்றை அடுக்குடன் வரிசையாக உள்ளன. இந்த சுரப்பிகளின் விட்டம் மற்றும் நீளம் சிறப்பினங்களின் உப்பு உறிஞ்சுதலைப் பொறுத்து மாறுபடும்[1]

பறவைகளில் உப்புச் சுரப்பி[தொகு]

சில கடற்பறவைகளில் உப்புச்சுரப்பி கண்குழியின் மேல்நுனியின் மீது அமைந்துள்ளது. அதன் கழிவு நாளம் மூக்குத்துவாரத்தில்தான் திறக்கின்றன. இது சுரக்கும் திரவத்தில் உள்ள சோடியத்தின் அளவு அதன் இரத்தில் இருக்கும் அளவை விட ஐந்து மடங்கு அடர்வு அதிகமாக உள்ளது. இது கடல் நீரின் உப்பு அடர்வை விட சுமார் 3 மடங்கு அதிகம்.

பறவைகளில் உப்புச் சுரப்பி

மூக்கிலிருந்து சுரக்கும் உப்பு மிகுந்த இத்திரவம், சளியைப் போல அதன் அலகிலிருந்து சிறிது நேரம் தொங்கிக்கொண்டிருந்து பின்னர் கீழே விழும். இதனைப் பார்பதற்கு அப்பறவைக்கு சளி பிடித்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

கடற்வாழ் உயிரிகளில் உப்புச்சுரப்பி[தொகு]

ஆமையில் உப்புச் சுரப்பி

கடற்வாழ் உயிரிகளான ஆமை, முதலை, பாம்பு மற்றும் பல்லி போன்ற உயிரிகளில் உப்புச் சுரப்பிநாளம் கண்களின் ஓரத்தில் திறக்கின்றன.தன் உணவில் உள்ள அதிகப்படியான உப்பை சுரப்பி முலம் வடிகட்டி கண்ணீராக வெளியேற்றுகின்றன.இதனைத்தான் 'முதலைக் கண்ணீர்'என்கிறோம்.பெண் பச்சை ஆமை (green turtle)ஆண்டிற்கு ஒரு முறைதான் கடற்கரை மணலில் அலைவதை காண முடியும்.தன் முட்டைகளை மணலில் பதித்துவிட்டு திரும்பும் போது கண்களின் ஓரத்தில் உப்பு கண்ணீரோடு சேர்ந்து வெளியேறுவதை பார்பதற்கு அழுவதை போன்ற தோற்றத்தைத் தரும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ellis, Richard A.; GOERTEMILLER, CLARENCE C.; STETSON, DAVID L (1982). "Significance of extensive /'leaky/' cell junctions in the avian salt gland". Nature 268 (5620): 555–556. doi:10.1038/268555a0. பப்மெட்:887174. Bibcode: 1977Natur.268..555E. 
  2. உயிரியலில் சில உண்மைகள்;இராம.இலக்குமிநாராயணன்,சேகர் பதிப்பகம்