இராம் சரண் யாதவ்
இராம் சரண் யாதவ் Ram Sharan Yadav | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1989-96 | |
முன்னையவர் | சந்திர சேகர் பிரசாத் வர்மா |
பின்னவர் | அணில் குமார் யாதவ் |
தொகுதி | ககஃடியா மக்களவைத் தொகுதி, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுக்தி மான்சி, ககரியா மாவட்டம், இந்தியா | 15 சனவரி 1926
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
மூலம்: [1] |
இராம் சரண் யாதவ் (Ram Sharan Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1989 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலம் ககஃடியா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் ஜனதா தள உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] சர்ச்சைக்குரிய சூழல் காரணமாக இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1993 ஜூலை 28இல் நரசிம்மராவ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நரசிம்மராவிற்கு ஆதரவாக வாக்களித்தார்.[3] 1996இல் நடைபெற்ற தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Ram Sharan Yadav Lok Sabha Profile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Partywise Comparison since 1977 Khagaria Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Bhajan, Ajit Chargesheeted In Jmm Case". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 23 January 1997. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Election". Rediff. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.