இயற்கையின் இயக்கவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இயற்கையின் இயக்கவியல் (Dialectics of Nature) (இடாய்ச்சு மொழி: Dialektik der Natur) என்பது ஏங்கல்சின் 1883 ஆண்டைய முற்றுபெறாத நூலாகும். இந்நூல் இயற்கையின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள மார்க்சீய மெய்யியலை, குறிப்பாக, இயக்கவியல் பொருள்முதல் வாத அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

வரலாறும் உள்ளடக்கமும்[தொகு]

ஏங்கல்சு தன் கையெழுத்துப்படியின் பெரும்பகுதியை 1872 முதல் 1882 வரையிலான காலத்தில் எழுதியுள்ளார். இது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த இடாய்ச்சு, பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் உள்ள புதுமைக் குறிமானங்களின் கூட்டுக்கலவையாகும்; என்றாலும் இந்நூல் அவரது வாழ்நாளில் வெளியிடப்படவில்லை. ஏங்கல்சு இறந்த பிறகு, எடுவார்டு பர்ன்சுட்டைன் நூலின் கையெழுத்துப்படியல் [[ஆல்பெர்ட் அய்ன்சுட்டைனுக்கு அனுப்பியுள்ளார். அவர் சில கணிதவியல் குழப்பங்கள் இருந்தாலும் அகல்விரிவான பொதுமக்கள் படிப்பதற்கேற்ற நூலெனப் பரிந்துரைத்துள்ளார். பிறகு இந்தக் கைப்படியை 1925 இல் மாஸ்கோவில் உள்ள மார்க்சு-ஏங்கல்சு- இலெனின் நிறுவனம் வெளியிட்டது[1] (a bilingual German/Russian edition).

இந்த நூலுக்கு உயிரியலாளர் ஜே. பி. எஸ். ஆல்டேன் 1939 இல் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். அவர் "எனவே ஏங்கல்சின் கால அறிவியல் ந்டைமுறையை அறியாதவர்களுக்கு இந்நூலைப் புரிந்துகொள்ளல் அரிதே" என தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இப்போது ஆற்றல் அழியாமை எனப்படும் கோட்பாடு அப்போது தான் இயற்பியலிலும் வேதியியலிலும் உயிரியலிலும் அறிமுகமாகத் தொடங்கியிருந்தது. அக்கோட்பாடு அப்போது முழுமை வாய்ந்ததாக இல்லை என்பதோடு, முழுமையான நிலையில் பயன்படுத்தப்படவும் இல்லை. இன்று ஆற்றல் எனக் குறிப்பிடப்படும் சொல் அப்போது 'விசை', 'இயக்கம்' எனவும் விசை, இயக்கம் எனும் சொற்கள் ஆற்றல் எனவும் தடுமாற்றத்தோடே பயன்பட்டுள்ளன" என்பதையும் ஆல்டேன் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஏங்கல்சு காலத்தில் முழுமையில்லாததாகவும் பிழைபட்டதாகவும் இருந்த கோட்பாடுகள் இப்போது முழும்ழியாகவும் சரியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஏங்கல்சின் சில கட்டுரைகள் காலவரம்புடையனவாகும். " ஏங்கல்சின் விரிந்த திறனாய்வு ஆர்வம் கோட்பாடுகளை விட, அறிதிறச் சிக்கல்களைச் சுற்றியே சுழலுவதைக் கண்ணுறலாம்".

இயற்கையின் இயக்கவியல் நூலில் முன்மொழியப்படும் ஓர் இயக்கவியல் "விதி" (இணைமுரணியல் விதி) "அளவியல் மாற்றம் பண்பியலான மாற்றத்துக்கு உருமாற்றம் அடைதலாகும்'". இவ்வகை மாற்றத்துக்கான எடுத்துகாட்டாக வெப்பநிலை சார்ந்து அமையும் நீரின் மாற்றம் அடிக்கடி குறிப்[பிடப்படுகிறது. ஏங்கல்சு இதற்கு எடுத்துகாட்டாக வேதியியலில் இருந்தும் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார். தற்கால அறிவியலில் இது கட்ட அல்லது முகநிலை நிலைபெயர்வு எனப்படுகிறது. இந்த இயங்குமுறை சமூக நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படும் முன்முனவும் நடப்பில் உள்ளது. அஇவியல் தொழில்நுட்ப வளர்ச்சிதரும் மக்கள்தொகை வளர்ச்சி சமூகக் கட்டமைப்பு மாற்றங்களை விளைவிப்பதாக அறிவிக்கப்படுகிறது.[2]

இயக்கவியலும் அதன் ஆய்வு முறையும் அளவையியல், புறநிலை அளவையியல், இருத்தலுக்கான நெறிமுறை போன்ற ஜார்ஜ் வில்கெல்ம் பிரெடரிக் எகலின் நூல்களில் இருந்து பெறப்பட்டவை. மெய்யியலாளரும் நூலாசிரியருமன எகல், கிரேக்க மெய்யியலாலராகிய எரக்கிளிட்டசிடம் இருந்து படித்தறிந்துள்ளார். எராக்கிளிட்டசு அனைத்தும் தொடர்ந்து மாறுகின்றன என்றும்l அனைத்துப் பொருள்களும் இரவு பகலாதல், ஒளி இருட்டாதல், இருத்தல்-இறத்தல் போல இரு எதிர்நிலைக் கூறகளைக் கொண்டுள்\ளதென்றும் கற்றுக்கொடுத்தார்.

இந்நூல் தூரிங்குக்கு எதிர்ப்பு எனும் ஏங்கல்சின் நூலில் இயற்கையைப் பற்றி அளித குறிப்புரைகளின் விரிவாக்கமாக உருவாகியது எனலாம். இந்நூல் தனியாக சிறுநூலாக ஏங்கல்சு வெளியிட்ட "Tகுரங்கில் இருந்து மாதன் தோன்றியதில் உழைப்பின் பாத்திரம்" என்பதையும் உள்ளடக்குகிறது. கையும் மூளையும் இணைந்தே வளர்ந்தன என விவாதிக்கிறார். இந்த எண்னக்கரு அல்லது ஏடல்(எடுகோள்) பின்னர் தொல்லுயிரி புதைபடிவ எச்சக் கண்டுபிடிப்புகளால் நிறுவப்பட்டுள்ளது (காண்க ஆதிரலோபித்திக்கசு அஃபாரென்சிசு, இருகால்நடை நடத்தை).

பொதுவாக, நூலின் உள்ளடக்கம் பின்வரும் "உயிரியல்" பிரிவில் அமைவதைப் போல முழுநூலுமே துண்டு துண்டான எளிய குறிப்புகள் வடிவிலேயே அமைகிறது.

முதுகெலும்பிகள். இவற்றின் சாரநிலைப் பான்மை: இவற்றில் முழு உடலும் நரம்பு மண்டலத்தைச் சூழ்ந்தமைகிறது. இதனால் தன் உணர்வு உருவாதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்புநிலை அமைகிறது. பிற அனைத்துவகை விலங்குகளிலும் நரம்பு மண்டலம் துணைச் செயலமைப்பாகவே உள்ளது. முதுகெலும்பிகளில் நரம்பு மண்டலம் உடலின் முற்றொழுங்கைப் பேணுகிறது.


முன்னேற்றப் பதிப்பகம், 1972 ஆம் ஆண்டுப் பதிப்பு, பக். 309.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Hunt, Tristram (2009). The Frock-Coated Communist: The Revolutionary Life of Friedrich Engels. London: Allen Lane. பக். 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7139-9852-8. https://archive.org/details/frockcoatedcommu0000hunt. 
  2. Carneiro, R.L. (2000). "The transition from quantity to quality: A neglected causal mechanism in accounting for social evolution. Proceedings of the National Academy of Sciences, Vol. 97, No. 23, pp. 12926–12931. See for a discussion of the historical development of dialectics. See Lincoln, Charles The Dialectical Path of Law, 2021 Rowman & Littlefield.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கையின்_இயக்கவியல்&oldid=3799979" இலிருந்து மீள்விக்கப்பட்டது