மார்க்சியத் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க்சியத் திறனாய்வு என்பது, கார்ல் மார்க்சினால் முன்வைக்கப்பட்ட அரசியல், பொருளாதார, சமுதாயக் கொள்கையான மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு முறை ஆகும். மார்க்சியக் கோட்பாட்டின் முன்னோடிகளான மார்க்சு, ஏங்கெல்சு ஆகியோரோ அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்த லெனினோ ஒரு இலக்கியக் கொள்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனாலும் அவ்வப்போது அவர்கள் இலக்கியம் பற்றித் தெரிவித்த கருத்துக்களையும் பின் வந்த மார்க்சியர்களின் விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு மார்க்சியத்தின் இலக்கியக் கொள்கை உருவானது எனலாம்.

மார்க்சியம் இலக்கியத்தைத் தன்னளவில் முழுமை கொண்ட ஒன்றாகக் கருதுவது இல்லை. சமுதாயத்தின் பல்வேறு அம்சங்களான அரசியல், சமயம், சட்டம், சாதி போன்றவற்றோடு செயற்பாட்டு உறவைக் கொண்டுள்ளது என்றும் அதனால், சமுதாய முழுமையில் ஒரு உறுப்பான இலக்கியத்தின் பண்பும் வளர்ச்சியும் பிற கூறுகளில் தங்கியுள்ளதுடன் அக்கூறுகளில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்றும் மார்க்சியம் கூறுகிறது.[1]

குறிப்புக்கள்[தொகு]

  1. நடராசன், தி. சு., 2009. பக். 171.

உசாத்துணைகள்[தொகு]

  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்சியத்_திறனாய்வு&oldid=1561316" இலிருந்து மீள்விக்கப்பட்டது